ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் ஒப்பந்தமாகி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர் ஜே பாலாஜி. தற்போது இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் பாலாஜி நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் கதாநாயகனாக பாலாஜி தோன்றினார்.
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இப்படி ஒரு நிலையில் ஆர் கே பாலாஜி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஷிவானி நடித்த சீரியல்கள்:
பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலகில் வாய்ப்புகளை பெற்று ஜொலித்து வருகிறார்கள். சிலர் சின்னத்திரையில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளித்திரையில் கலக்க இருப்பவர் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சிறிய மூலம் பிரபலமடைந்தவர். இவர் தனது 14 வயதிலேயே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி:
அதோடு தன்னுடைய 14 வயதிலேயே பல்வேறு விளம்பரங்களில் சிவானி நடித்து உள்ளார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3 தொடரின் மூலம் தான் டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பகல் நிலவு சீரியல் தான். மேலும், பகல் நிலவு சீரியளுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து உள்ளார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
படங்களில் கமிட்டான ஷிவானி:
இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே சேர்ந்தது. மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டும் இல்லாமல் தற்போது இவர் கமலஹாசனின் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி- பொன்ராம் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது பலருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் நடிகை சிவானி நாராயணன் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி படத்தில் ஷிவானி:
இதுகுறித்த புகைப்படத்தை சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் அவர் கூறியிருப்பது, மிகவும் திறமையான இயக்குனர் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து பணி புரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்ஜே பாலாஜி படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் சிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த படம் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.