அட, இந்த போட்டியாளர் மைனாவிற்கு இப்படி ஒரு நெருங்கிய உறவினராம். அதான் நல்லா ஜால்ரா அடிக்கிறாரோ ?

0
1456
myna
- Advertisement -

பிக்பாஸ் பிரபலம் ஏ டி கே, மைனா நந்தினிக்கு உறவுக்காரன் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி தற்போது நான்காவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அதோடு பலர் புது முகங்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

பின் வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார்.

நான்காவது வாரம் டாஸ்க்:

தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ஷெரினா வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஏ டி கே, மைனா நந்தினிக்கு உறவுக்காரன் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஏடிகே. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆரியன் என்ற இசை ஆல்பத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

ஏடிகே திரைப்பயணம்:

இவருடைய முழு பெயர் தினேஷ் கனகரத்தினம். மேலும், விஜய் ஆண்டனி இசையில் வெளியான ஆத்திச்சூடி என்ற பாடல் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக பாடி இருந்தார். அதற்கு பிறகு இவர் டி இமான், ஏ ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இதனாலே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு.

ஏடிகே – மைனா உறவு:

இவர் ஜேஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இதே நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரின் உறவுக்காரராக ஏடிகே இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ம மைனா நந்தினி தான். ஏடிகே, மைனாவின் மாமன் மகன் தானாம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement