என் சட்ட புடிச்சி இழுத்தவர ஏன் suport பண்ணாரு – விக்ரமனை விமர்சித்த தனலட்சுமி – Adk கொடுத்த நச் பதிலடி.

0
654
ADK
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அஸீமின் வெற்றி சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. மற்றவர்களை இழிவாக பேசி விளையாட்டை தவறான முறையில் விளையாடினால் பிக் பாஸில் வெற்றி வெற்றி பெற முடியுமா என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் சிலரே அஸீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகின்றனர். அசீம் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பல முறை சர்ச்சையில் சிக்கினார்.

- Advertisement -

அஸீமிற்கு குவியும் எதிர்ப்புகள் :

இப்படிப்பட்ட நிலையில் தான் அசீம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்றும், தனலட்சிமியை பொம்மை டாஸ்கின் போது தவறான இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்ற குற்றசாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்து அபியூஸர் அசீம் என்று பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து மகேஸ்வரி கூட தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அசீம் தனலட்சிமியிடம் கேட்ட கேள்வி :

இந்நிலையில் அசீம் டைட்டில் வென்றது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறிய நிலையில் அசீம் ரசிகர்களுடன் முதல் முறையாக நேர்காணலில் பேசியிருந்தார். இதில் அஸீமின் ஆதரவாளர்களான மணிகண்டன், அசல் கோலார் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளரான தனலட்சிமிக்கு போன் செய்து உன்னை தவறான இடத்தில் தொட்டேனா தங்கச்சி என்று கேட்டார் அதற்கு தனலட்சிமி இல்லை அண்ணா என்று கூறினார்.

-விளம்பரம்-

மேலும் பேசிய தனலட்சுமி, அப்யூஸ் என்றால் என்ன? அப்யூஸ் என்பது ஒரு பெண்ணை தவறான நோக்கத்தில் தொடுவது தானே. அப்படியென்றால் என்னிடம் அசீம் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை விளையாட்டின் போதுதான் பிடித்து கீழே தள்ளினாரே தவிர தவறான நோக்கத்தில் தொடவில்லை, எனவே இது அப்யூஸ் கிடையாது என்று கூறினார்.”இதனை வைத்து அசீமை அப்யூசர் என்றால் விக்ரமனும் தான் அப்யூசர்.

விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் விளையாடும்போது என்னுடைய கால்களை பிடித்து இழுத்து விளையாடினார். மேலும் என்னுடைய உடையை இழுத்த நபருக்கு ஆதரவாக பேசினார். அதுவும் அப்யூஸ் தானே? அப்படியிருக்க அசீம் செய்தது மட்டுமே எப்படி அப்யூசாக இருக்க முடியும் என்று கூறினார் தனலட்சிமி. ஆனால், பொம்மை டாஸ்க்கின் போது அசீம் என்னை தவறான இடத்தில் தொட்டான் என்று தனலட்சுமி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனலட்சுமியின் இந்த பேச்சை தொடர்ந்து அந்த குறும்படத்தை போட்டு நெட்டிசன்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனலட்சுமியின் இந்த பேச்சு குறித்து பதிவிட்டு இருக்கும் Adk ‘ஒருவரை தவறாக தொடுவதற்கு, ஆரோக்யமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement