பிக் பாஸ் ஐசுவின் காதலர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி - ரவீனா தான் காதல் கண்டன்ட்க்கு கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் - ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள்.
https://twitter.com/SriniMama1/status/1719547540318671240
எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன்னையும் நிக்சனையும் இணைத்து வீட்டில் உள்ளவர்கள் பேசுவது, புதிய போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்டுகள் போன்றவற்றால் குழப்பம் அடைந்திருக்கும் ஐஷு, இது பற்றி ஒரு வழியாக மணியிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார்.
https://twitter.com/itzSekar/status/1719262015980757089
அவனைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அவாய்ட் பண்ணவும் முடியல. எனக்கு வெளியில் boyfriend இருக்குனு சொன்னதுக்கு. மூனு மாசம் தான அவனை தெரியும்னு கேக்குறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என்று கூறி இருந்தார்.அதிலும் ஐசு, நான் எதாவது சிக்கலில் சிக்கினால் என்னை வீட்டில் சேர்க்கவே மாட்டார்கள் என்று சொன்னார். ஆனாலும், வெளியில் ஒரு boy friendஐ வைத்துக்கொண்டு ஐசு இப்படி செய்து வருகிறது பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது.
https://twitter.com/Classicparktv/status/1719543432174256253
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாயாவிடம் பேசிக்கொண்டு இருந்த ஐசு 'நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த போது எனக்கு வீட்டில் அவ்வளவு பிரச்சனை வெளியில் சென்று என்னுடைய ஆளும் போய்ட்டான் என்றால் நான் முடிந்தேன் என்று மாயாவிடம் கூறியிருந்தார். இப்படி ஐசு தொடர்ந்து தனக்கு வெளியில் காதலன் இருக்கிறான் என்று கூறிக்கொண்டு வரும் நிலையில் அது நிரூப் தான் என்று சில கிசு கிசு எழுந்து இருக்கிறது.மேலும், நிரூப்பின் பிறந்தநாளில் ஐசு தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
நிரூப், பிக் பாஸ் போட்டியின் மூலம் தான் பிரபலமானார். அவர் பிக் பாஸில் இருந்த போதே யாஷிகாவுடன் தனக்கு காதல் இருந்ததாகவும் பின்னர் அவரை பிரிந்துவிட்டதாகவும் குறி இருந்தார். அதே போல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும் அபிராமிக்கு இருந்த காதல் தெரியவந்தது. இப்படி பல பிக் பாஸ் போட்டியாளருடன் காதலில் இருந்துள்ள நிரூப் தான் தற்போது ஐசுவின் காதலராக இருந்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.





