ஐஸ்வர்யா ஆட்டத்தை அடக்க இதுதான் வழியா..! கமல் இதை செய்வாரா..?

0
287
Aishwarya

ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் இந்த வார ஹைலைட்டாக இருந்து வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு ‘ராணி’ என்ற பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. இதனால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றது. ஆனால் போட்டியாளர்களை நேரடியாக வெளியேற்றுவதற்கான ஒரு வழியும் கமலிடம் இருக்கிறது.

Bigg-Boss

எப்படியெனில் கடந்த 2016 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 10 இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா என்ற நபரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிலேயே மிகவும் ஆக்ரோசமாக இருக்கிறார் என்றும் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது அவர் தான் அதிக கெட்ட வார்த்தை பேசுகிறார் இதனால் சக போட்டியாளர்க்கும் சில தொந்தரவுகள் இருந்து வந்தது என்றும் கூறி அவரை நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சல்மான் கான் வெளியேற்றினார்.

இந்நிலையில் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டு வருகிறார். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளால் தான் வெளியேற்றபட்டார்.

salman

ஆனால், ஐஸ்வர்யாவிற்கு அளிக்கப்பட்ட டாஸ்கால் தான் இவ்வாறு சர்வாதிகாரம் செய்து வருகிறார் என்று எடுத்துக் கொண்டாலும், அவர் பாலாஜி, பொன்னம்பலம், ரித்விகா ஆகியோர் மீது இருந்த தனிப்பட்ட வன்மத்தால் தான் கீழ்த்தரமான செயல்களை செய்து வருகிறார். எனவே, இந்தி பிக் பாஸில் சல்மான் கானுக்கு இருந்த அதிகாரம் போலவே தமிழ் பிக் பாஸிளும் கமலுக்கு போட்டியாளர்களை நேரடியா வெளியேற்றும் அதிகாரம் இருக்கும்.

ஆனால், அது போல ஐஸ்வர்யாவை நேரடியாக வெளியேற்றுவாரா என்பது சந்தேகம் தான். இதற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா டாஸ்க்கிற்காக தான் இதையெல்லாம் செய்து வருகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது பிக் பாஸ்.

Aishwarya-dutta

அதே போல இந்த ‘சர்வாதிகார ராணி ‘டாஸ்க்கை சிறப்பாக முடித்தால் அவருக்கு அடுத்த வாரம் நோமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார். எனவே, இந்த வார இறுதியில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை கமல் கண்டிப்பாரே ஒழிய அவரை வெளியேற்ற மாட்டார் என்பது மட்டும் உறுதி.