பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா செய்த முதல் காரியத்தை பாருங்க..!

0
219
Aishwarya

கடந்த 3 மதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் (செப்டம்பர் 30) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரித்விகா முதல் இடத்தை பெற்று சீசன் 2 வின் வேற்றுயாளராக அறிவிக்கபட்டார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தை ஐஸ்வர்யா பிடித்திருந்தார். ரித்விகாவிற்கு அடுத்துபடியாக ஐஸ்வர்யாவிற்கு தான் அதிக ஆதரவு இருந்து வந்தது. ஐஸ்வர்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் இவருக்கென்று ஒரு ஆர்மியும் இருக்கத்தான் செய்கிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். ஆனால், ஐஸ்வர்யா சற்று வித்யாசமாக செலஃபீ வீடியோ ஒன்றில் ஆட்டம் போட்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.