பாலாஜி சொன்ன M, T, P, கெட்ட வார்த்தை.! ஐஸ்வர்யா தலைவியாக பாலாஜிக்கு போட்ட கண்டிஷன்.!

0
1190

கடந்த வாரம் நடந்த டாஸ்கின் மூலம் ஐஸ்வர்யா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தலைவரான முதல் நாலே தலைக்கனம் ஏறியது போல செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா நேற்று பாலாஜியிடம் ‘நான் தான் இந்த வீட்டின் தலைவி, நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இனிமேல் வீட்டில் நீங்கள் கேட்ட வார்த்தை பேச கூடாது ‘ என்று வாயை கொடுத்து வம்புக்கு இழுத்தார்.

Bigg-Boss

- Advertisement -

ஆனால், பாலாஜியோ ‘நான் எப்போ பேசின, யார பேசினேன்னு சொல்லுங்க’ என்றார். அதற்கு ஐஸ்வர்யா ‘நீங்க தான் அடிக்கடி ‘பி’ வார்த்த ‘எம்’ வார்த்த ‘டி’ வாரத்தையெல்லாம் யூஸ் பண்றீங்க’ என்று கூற, அதற்கு பாலாஜி நான் யாரா அப்படி சொன்னானே சொல்லுங்க என ஐஸ்வர்யாவை கேட்டார். உடனே ஐஸ்வர்யாவும், யாஷிகாவிடம் அது என்ன வார்த்த என்று கேட்க, அதற்கு பாலாஜி ‘நான் உங்களைத்தான் கேட்டேன் நீங்க சொல்லுங்க’ என்றார்.

அதற்கு ஐஸ்வர்யா, சென்றாயனிடம் ‘உங்கள தான அவர் அடிக்கடி கேட்ட வார்த்தைல திட்றார் நீங்க கேட்க வேண்டியது தான ‘ என்று கேட்க அதற்க சென்ட்ராயன் ‘ஏங்க, நாங்க ரெண்டு பெரும் மாமா மச்சானு பேசிக்குவோம். அது எங்க விஷயம்’ என்று கூறுகிறார். உடனே ஐஸ்வர்யா தைய தக்கா என்று குதித்துவிட்டு ‘இந்த வாரம் நான் தான் தலைவி அதுனால எல்லாரும் நான் சொல்றத தான் கேட்கணும்’ என்று கொஞ்சம் ஓவராக பேசிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே சென்று விட்டார்.

-விளம்பரம்-

Aishwarya

ஐஸ்வர்யா,பாலாஜி மீது கடும் கோவத்தில் தான் இருக்கிறார் என்பது இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் இருந்து நன்றாக தெரிந்தது. அவர் மீது குப்பையை கொட்டுவது, அவர் படுத்திருக்கையில் அவரை வேண்டுமென்றே தொந்தரவு செய்வும் விதத்தில் நடந்து கொள்வது போன்ற செயல்களை செய்து இருந்தார். சக போட்டியாளர் என்பதை விட வயதில் மூத்தவர் என்றும் பார்க்காமல் ஐஸ்வர்யா செய்துள்ள இந்த செயல்கள் ரசிகர்களை எரிச்சலூட்டியுள்ளது. இவை அனைத்திற்கு இன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விடை தெரிந்துவிடும்.

Advertisement