யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.! இப்படி சொல்லிட்டாரே

0
650
mumtaz
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

yashika

- Advertisement -

இதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. பின்னர் வழக்கம் போல சில மணி நேரத்தில் சேர்ந்து கொண்டு விட்டனர். ஆனால், யாஷிகாதான் இத்தனை நாட்கள் அவளுக்காக நான் இருந்தேன் ஆனால் அவள் என்னையே இப்படி பேசி விட்டாலே என்று நேற்று மும்தாஜிடம் புலம்பி கொண்டிருந்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் மும்தாஜ் மற்றும் யாஷிகா பேசிக்கொண்டிருக்கையில் மும்தாஜிடம், நான் முதல் முறையை அவ பக்கம் அன்னிக்கி நிக்கலன்னு என்கிட்ட சண்டை போட்ட. நான் மஹத், டேனி ஐஸ்வர்யா எல்லாரிடமும் என்னை மீறி நெறய விஷயத்த அவங்ககிட்ட சொன்ன ஆனா அவ என்ன புரிஞ்சிக்கல என்று கூறிகிறார் யாஷிகா.

-விளம்பரம்-

mumtaz

பின்னர் அவரை தனது தோளில் சாய்த்த மும்தாஜ், நீ எப்போதும் நல்ல மனது உடையவள், நீ ஐஸ்வர்யா பிரச்னையா உன் பிரச்னையா எத்திக்காத அவளை நீ ரெண்டு முறை காப்பாத்திருக்க. நீ எதுக்கு பீல் பண்ற இனிமேலாவது உன்ன பத்தி மட்டும் யோசிச்சி உனக்காக விளையாடு என்று கூறுகிறார்.

மஹத் இருக்கும் போது யாஷிகா, ஐஸ்வர்யா இருவருமே மும்தாஜிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். அதிலும் ஐஸ்வர்யா, மும்தாஜை வயது வித்யாசம் பார்க்காமல் மிகவும் மரியாதையையின்றி நடந்து கொண்டார். இதனால் மும்தாஜ், அவர்கள் செய்ததை மன்னித்துவிடுவேன் ஆனால், மறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் பேட்டி என்று கொஞ்சி குலாவி வருகிறார் மும்தாஜ்.

Yashika-big-boss

நேற்று ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய வேண்டும் என்று சக போட்டியார்கள் சொன்னபோதும் மும்தாஜ் மற்றும் யாஷிகா மட்டும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பேசினார்.ஆனால், அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக தான் ஐஸ்வர்யாவை பற்றி கவலை படாதே உன்னக்காக மட்டும் விளையாடு என்று யாஷிகாவிடம் கூறியுள்ளார் மும்தாஜ். இதனை வைத்து பார்க்கும் போது கமல் சென்ராயனை சொன்னது போல நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்ற வசனம் மும்தாஜிக்கு தான் பொருந்து என்பது போல தான் உள்ளது.

Advertisement