நேற்று (ஜூலை 21) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இடையே நடந்த வாக்குவாதம் தான் ஹைலயிட்டாக பேசப்பட்டது. இந்த விவாதத்தின் போது நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் பொன்னம்பலத்திற்கும் ஒரு வார்த்தை யுத்தமே நடைபெற்றது.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அகம் டிவி வழியே கமல் , பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பொன்னம்பலம் , நடிகை ஐஸ்வர்யா தனது அருகில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்த போது ஐஸ்வர்யாவின் கால் தன் மீது பட்டதாகவும் , அதனால் நான் அவருக்கு அட்வைஸ் செய்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல நடந்து கொண்டால் தான் தமிழ் நாட்டில் நீ நிலைத்து நிற்கமுடியும் என்று கூறியிருந்தார்.ஆனால், அதன் பின்னர் ஐஸ்வர்யா ‘உங்கள் மீது கால் போட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டேனே அதை ஏன் கூறவில்லை’ என்று பொன்மபலத்திடம் கேட்க டென்ஷன்னன பொன்னம்பலம் ‘உன் காது என்ன செவிடா ,நீ சாரி கேட்டதை நான் சொன்னனே’ என்று கத்த ஆரம்பித்து விட்டார்.
இருவருக்கும் விவாக்குவாதம் அதிகமாக ஒருகட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா”எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு சொல்லாதீங்க, எப்போப்பாத்தாலும் தமிழ் கலாச்சாரம்னு சொல்றீங்க.நான் பெங்கால்ல இருந்து வந்திருக்க, எங்களுக்கும் கலாச்சாரம் எல்லாம் இருக்கு. what non sense is this ” என்று பொன்னம்மபலத்தை கூறியுள்ளார்.