பிக்பாஸ் விட்டு வெறியேறிய பிறகு ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா என்ன சொன்னாங்க தெரியுமா..?

0
377
Bigg-boss

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நேற்றுடன் நிறைவடைந்தது. இம்முறை பெண்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலக்ஷ்மி என நான்கு பேரில் ஜனனி மற்றும் விஜயலக்ஷ்மி வெளியேறி இருந்தனர்.

Aishwarya

இறுதியில் ரித்விகா முதல் பரிசையும் ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தனர். 105 நாட்கள் தனது குடும்பத்தையும், நண்பர்களையும், வெளி உலகத்தையும் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் வெளியே வந்ததும் முதன் முறையாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்களை பார்ப்போம்.

ரித்விகா:

அனைவருக்கும் நன்றி, இந்த சிறப்பான அன்பைவிட வேறு எதனையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

ஜனனி:

வணக்கம் ! நீண்ட நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது அன்பிற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. நன்றி நன்றி நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

விஜயலக்ஷ்மி:

நான் தற்போது லட்ச கணக்கான இதயங்களுக்கு சொந்தமாக உள்ளேன்.நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் கண்டிப்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிடுவேன் என்று பதிவிட்டுள்ளார்.