ஜிம் உடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா. ஊரடங்கு முடியற வரை வெய்ட் பண்ணாங்க போல.

0
11158
ayswarya-Dutta
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எத்தனையோ நபர்கள் தற்போது சினிமாவில் படு பிசி. அதே போல இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர் நடிகைகள் பங்குபெற்றதற்கு பின்னர் தான் அவர்களுக்கு சினிமா வாய்ப்பும் மீண்டும் வர துவங்கியது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தனர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

-விளம்பரம்-

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நகுலின் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதிலும் ராணி மஹா ராணி டாஸ்கில் இவர் செய்த அட்டகாசங்கள் ஏராளம்.

- Advertisement -

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அதே போல அம்மணி யாஷிகாவுடன் இணைந்து அடித்த கூத்துக்களும் ஏராளம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழியாக இருந்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜிம் உடையில் கவர்ச்சியாக இருக்கு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகை ஐஸ்வர்யா தத்தா, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement