லாஸ்லியா பர்ஸ்ட் லுக்கை பாத்தீங்க. இந்த பிக் பாஸ் நடிகையின் வெறித்தனமான பர்ஸ்ட் லுக்கை பாருங்க.

0
3163
ayswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதற்கு பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image

தற்போது இவர் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ளார். இது இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், பிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ளார். இது இணையதள விளையாட்டான பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், நடிகை ஐஸ்வர்யா தத்தா அவர்கள் தற்போது மிளிர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு நடிகை இந்த அளவுக்கு முயற்சி செய்து நடிப்பது பெரிய விஷயம் என்று பாராட்டி வருகிறார்கள். அந்த போஸ்டர் பார்ப்பதற்கே மிரள வைக்கிறது. சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்து உள்ளார். இத்திரைப்படத்தை நாகேந்திரன் இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement