எலிமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா தீட்டிய திட்டம்..! ஐஸ்வர்யா நரி தந்திரம்

0
839

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் வித்யாசமாக நடைபெற்றது. சென்ற வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட ரித்விகாவை தவிர மீதம் மூன்று பெயரை போட்டியாளர்கள் கலந்துரையாடி ஒருமனதாக தேர்வுசெய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருந்தார். அதே போல கமல் சார் இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யாவின் பெயர் இடம்பெற வேண்டும் என்று பறித்துரைத்ததாக அறிவித்திருந்தார்.

Promo-3

- Advertisement -

இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐஸ்வர்யாவின் பெயரை இடம்பெற வைக்க ஒரு நீண்ட விவாதமே நடந்தது. கமல் குறியிருந்ததால் ஐஸ்வர்யாவின் பெயரை யாஷிகா, மும்தாஜை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே நாமினேஷனிற்கு பரிந்துரை செய்தனர். ஆனால், இந்த வாரம் நான் நாமினேட் ஆகமாட்டேன் என்று கூறிய ஐஸ்வர்யா கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை. மேலும், பாலாஜியை நாமினேஷனுக்கு செல்ல சொன்னார் ஐஸ்வர்யா.

ஒரு கட்டத்தில் கடுப்பான பாலாஜி, நான் மக்களை சந்திக்க தயார், நீங்கள் தயாரா என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா நான் தயார் இல்லை கமல் சார் என்னை இந்த வாரம் நிறைய திட்டி விட்டார் இந்த வாரம் நான் என்னை நிரூபிக்க வேண்டும் நான் இந்த வீட்டில் தான் இருப்பேன் வேற யாராவது போங்க என்று கூறுகிறார். அது போக யாஷிகாவிடம் ஸ்மூக்கிங் அறையில் பேசிய ஐஸ்வர்யா நாம இருவரும் கடைசி வரை வர வேண்டும் குறுக்கே எது வந்தாலும் தகர்க வேண்டும். டிக்கெட் டு பினாலே வாங்க வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

Aishwarya

பின்னர் மீண்டும் இந்த வாரம் நாமினேஷனிற்கான விவாதம் நடக்கிறது. பாலாஜி, மும்தாஜ் ஆகியோர் நாமினேஷனிற்கு ஒப்புக்கொள்ள ஐஸ்வர்யா ஒப்புக்கொள்ளாமல் விவாதம் செய்து கொண்டே இருக்கிறார். இந்த விவாதம் நீண்டு கொண்டே இருக்க இந்த வார தலைவியான ரித்விகா அதிகப்படியான ஐஸ்வர்யாவின் பெயரை நாமினேஷன் லிஸ்டில் சேர்த்து விடுகிறார் முதலில் ஒப்புக்கொள்ள அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா பின்னர் இறுதியில் சரி என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறார்.

கமல் கூறியது போலவே ஐஸ்வர்யாவின் பெயர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்று விட்டது. எனவே, இந்த வாரம் கண்டிப்பாக ஐஸ்வர்யா வெளியேறி விடுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பற்றி மக்களுக்கு ஏதாவது கதை சொல்ல போகிறாரா கமல் என்று இந்த வார இறுதியில் தான் பார்க்கவேண்டும்.

Advertisement