இந்த வாரமும் தப்பித்தாரா ஐஸ்வர்யா..! வெளியேறபோவது இவரா..? தில்லு முள்ளு ..!

0
224
Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபடுவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகம் நிலவி வருகிறது.

Aishwarya

தற்போதைய நிலவரபடி இந்த வாரம் நடந்து வரும் வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதில் ஐஸ்வர்யாவைவிட மும்தாஜிற்கு குறைவான வாக்குகள் பதிவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற்றபட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தாலும், இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸ் சதி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக மும்தாஜை தான் தவறானவர் என்பது போலவும் அவர் தான் அதிகப்படியான தவறுகள் செய்தவர் என்பது போல கடந்த நாட்களாக காண்பித்து வருகின்றனர்.

mumtaj

அதே போல போட்டியாளர்களும் சரி, தற்போது பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ள சீசன் 1 போட்டியாளர்களும் சரி. மும்தாஜை தான் அதிகம் குறை கூறி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் மும்தாஜ் மீது வெறுப்பை வரவழைத்து மும்தாஜிற்கு வரும் வாக்குகளை திசை திருப்ப பார்க்கின்றனர்.

மும்தாஜை தான் இந்த வாரம் டார்கெட் செய்கின்றனர் என்று கடந்த ஞாயிற்றுகிழமை கமல் பேசியத்திலிருந்தே தெளிவாக தெரிந்தது. ஏனெனில் ஞாயிற்று கிழமை கமல், மும்தாஜிடம் காரணமே இல்லாமல் சற்றும் கடுமையாக பேசி இருந்தார். தற்போது முழுக்க முழுக்க மும்தாஜ் தான் பிக் பாஸ் வீட்டில் வெறுக்க கூடியவர் என்பது போல அவரையே தவறான பீம்பத்தில் காண்பித்து வருகின்றனர்.

அதே போல ஐஸ்வர்யாவிற்கு அவரது சொந்த மண்னான பெங்காலி மாநிலத்தில் அதிகப்படியான ஆதரவுகள் இருக்கின்றது. கடந்த வாரம் நாமினேஷனில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு வாக்களித்தால் ஒரு ஓட்டுக்கு paytm 50 ரூபாய் ரீ-சார்ஜ் கூப்பன் வழங்கபடும் என்று ஐஸ்வர்யாவின் ஆதரவாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Aishwaryabigg boss

மேலும், இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு வாக்களித்தால் பெங்காலி மக்களுக்கு 200 paytm ரீ-சார்ஜ் கூப்பன் அளிக்கப்படும் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளனர். எனவே, இந்த வாரமும் ஐஸ்வர்யாவிற்கு பெங்காலி மக்களின் அதரவு அதிகப்படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்த வாரம் மக்கள் ஆதரவு முழுக்க ரித்விகாவிற்கு தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் ஐஸ்வர்யாவை விட மும்தாஜிற்கு தான் மிகவும் கம்மியான வாக்குக்கள் பதிவாகி இருக்கிறது என்று கூறி இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பற்றப்பட்டாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.