நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இந்த வருடம் ரிலீஸான `தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரைக்கும், பல வித்தியாசமான படங்கள்; கெட்டப்கள் என மக்கள் மனதில் இடம் பிடித்த சூர்யாவுக்கு, இன்று 44வது பிறந்தநாள். அவரைப் பற்றி, சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…
கமல்தான் சூர்யாவுக்கு குரு.`தேவர் மகன்’ படம் வந்த சமயத்தில் அதில் வரும் கமலைப் போன்றே பன்க் தலையோடு வலம் வந்தார். `கஜினி’ பட வெற்றியின் போது, `ஒரு அண்ணனோட இடத்திலிருந்து சந்தோசப்படறேன்’ என்று கமல் சொன்னது, அவருக்குத் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத மற்றொரு நிகழ்வு.
பி.காம் முடித்த பிறகு கார்மென்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.,அங்கு வேலை செய்த தியாகு என்பவர், `முதலில் சரவணன் என்ற அடையாளத்தை உருவாக்கு. பணம் சம்பாதிக்கும் முன் நல்ல பெயரைச் சம்பாதிப்பவனே சிறந்த பிசினஸ்மேன்’ என்று அவரது தோளைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
கார்மென்ஸில் தான் வாங்கிய முதல் சம்பளமான 1,200 ரூபாயில், ஆரஞ்சு நிறப் புடவையைத் தன் தாய் லட்சுமிக்கு வாங்கிக் கொடுத்தார்.
கார்மென்ஸில் வேலை செஞ்சிட்டு இருந்தப்போ,சொந்தமா பேக்டரி ஆரம்பிக்கணும்கிறதுதான் சூர்யாவோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக வங்கியில லோன் வாங்கலாம்னு முடிவு எடுத்தப்போ, அது குடும்பத்தைப் பாதிக்குமோன்னு ஒரு கவலையும் சூர்யாவுக்கு இருந்துச்சு. அப்போதுதான் இயக்குநர் மணிரத்னத்திடமிருந்து சூர்யாவுக்கு நடிக்க அழைப்பு வந்தது. அதுதான் வசந்த் இயக்கிய `நேருக்கு நேர்’.