இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பல மொழிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் டாபிக் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. சில தினங்களுக்கு முன் தான் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இது ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பி வருகின்றார்கள். இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள நபர்கள்:
கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த பிரபலங்கள்:
ஆனால், பிக் பாஸ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் செல்ல இருப்பதாக இருந்த பல பேர் செல்லவில்லை என்று தெரிந்தவுடன் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதற்கு பலரும் விளக்கம் கொடுத்தார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா செல்வதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு இருந்தது.
ஐஸ்வர்யா தத்தா கொடுத்த விளக்கம்:
இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்க்கு ஏன் நீங்க போல? என்று ரசிகர் ஒருவர் கேட்டு இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா தத்தா விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை பயணம். ஏற்கனவே இறுதி போட்டி வரை வந்து விட்டேன். அதை விட என்ன வேண்டும். பெரிய திரையில் உங்களை மகிழ்விக்கும் நேரம் இது என்று பதில் அளித்துள்ளார். இப்படி இவர் அளித்து உள்ள பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா தத்தா திரை பயணம்:
மேலும், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நகுலின் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதிலும் ராணி மஹா ராணி என்ற டாஸ்கில் இவர் செய்த அட்டகாசங்கள் ஏராளம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.