ஐஸ்வர்யா காட்டில் மழை..!மஹத்தை தொடர்ந்து மற்றும் ஒரு ஹீரோவுடன் கை கோர்க்கிறார்..!அதிகாரபூர்வ தகவல்..!

0
234
Aiswarya-dutta

நடிகர் நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தமிழில் ‘பாயும் புலி’, ‘அச்சாரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்துள்ளது.

aariaiswarya

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இறுதி போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சிம்பு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை

தற்போது மஹத்-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலை பட நடிகர் ஆரியுடன் புதிய படத்தில் கை கைகோர்த்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா.

Aiswarya aari

காதல் கதையாக உருவாக உள்ள பெயரிடபடாத இந்த புதிய படத்தை “அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்கதில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.