தமிழ் மொழியை அவமானபடுத்தினரா அக்ஷரா ? EvictAkshara என்ற ஹேஷ் டேக்கை போட்டு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.

0
478
akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 74 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்றாலே அதில் சர்ச்சைக்கு என்றும் பஞ்சம் இருந்தது கிடையாது. அந்த வகையில் இந்த சீசனில் நமிதா மாரிமுத்து வெளியேறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை நமிதா மாரிமுத்து ஏன் வெளியேறினார் என்ற ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தனக்கு உடல்நிலை பிரச்சினை இருந்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது நமீதா மாரிமுத்து பேட்டி ஒன்றில்கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ராஜு அக்ஷரா சண்டை :

இந்த சர்ச்சைக்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷரா தமிழ் மொழியை அவமானப்படுத்தி விட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் அபினை, தாமரை , அக்ஷர ஆகியோர் பங்கேற்றனர். இந்தடாஸ்கின் போது அக்ஷரா மற்றும் இருவருக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

அப்போது டாஸ்க்கில் நடுவராக இருந்த பிரியங்கா இருவரையும் சமாதானம் செய்ய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே இந்த டாஸ்க்கிற்கு முன்னர் கொடுக்கப்பட்ட பலூன் டாஸ்கின் போது அக்ஷரா மற்றும் ராஜு இருவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்ததால். இந்த டாஸ்கின் போது ராஜு மற்றும் அக்ஷரா இருவருக்கும் பிரச்சினை பயங்கரமாக சென்று கொண்டிருந்தது ஒரு கட்டத்தில் அக்ஷரா, ராஜுவிடம் சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்த போது ஆங்கிலத்தில் பேசி ராஜுவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

பிரியங்காவின் சமாதானம் :

அப்போது இந்த டாஸ்கின் நடுவரான பிரியங்கா அக்ஷராவை சமாதானம் செய்து வைத்தார். மேலும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த அக்ஷராவை தமிழில் பேச சொல்லி பிரியங்கா சொன்னதும் கடுப்பான அக்ஷரா ‘நீ கொஞ்சம் சும்மா இரும்மா’ தமிழ்ல பேசு மயிரில் பேசு’ என்று கூறி இருந்தார். அக்ஷரா இப்படி பேசியது சமூக வலைத்தளத்தில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, அக்ஷ்ரா தமிழ் மொழியை அசிங்கப்படுத்திவிட்டார் என்று பலர் சமூக வலைதளத்தில் கொதித்து எழுந்து வருகின்றனர். மேலும், #EvictAkshara என்ற ஹேஷ் டேக்கை போட்டு வருகின்றனர். ஆனால், அக்ஷரா, பிரியங்கா மீது இருந்த கோபத்தில் தான் எதார்த்தமாக இப்படி திட்டிவிட்டார் என்று அக்ஷராவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிருப்தி :

பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களில் அக்ஷரா மீது ஒரு காண்டில் தான் இருக்கிறார் பிரியங்கா. அதிலும் பிக் பாஸ் ஆரம்பித்த சில வாரங்களிலேயே காகிதத்தில் எதோ எழுதி அதை பாத் ரூமில் போட்டதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா, நான் சத்தமாக பேசுறதினால் நீ நல்ல பொண்ணு என்று வெளியில் பார்க்கிற மக்களுக்கு வேற மாதிரி தெரியும். நீ எது பேசுனாலும் நேரடியாக பேசு. ஆனால், நீ பண்ணறதை பார்த்தால் நாங்கள் ஏதோ உன்னை டார்கெட் பண்ணுற மாதிரி வெளியில் தெரியும். எது ரொம்ப தப்பு, அசிங்கமாக இருக்கு என்று பிரியங்கா கூறினார்.

ஏற்கனவே இருக்கும் பிரியங்கா அக்ஷரா உள்குத்து :

அதே போல பிக் பாஸ் ஆரம்பத்தில் like, dislike கொடுக்கும் டாஸ்கில் ராஜு, அக்ஷராவிற்கு லைக் கொடுத்ததை பொறுத்துக்கொள்ளாமல் அவரிடம் brain வாஷ் செய்தார். மேலும், காயின் டாஸ்கில் அக்ஷராவிற்கு மட்டும் காயின் சென்றுவிட கூடாது என்று மற்றவர்களை உசுப்பேற்றினார். அவ்வளவு ஏன் நேற்றய பலூன் டாஸ்கில் கூட ராஜுவுடன் இணைந்து அக்ஷராவின் பலூனை உடைக்கவே பிரியங்கா முதலில் திட்டமிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement