தங்க கடத்தல் வழக்கு, 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அமலாக்க துறையின் விசாரணையில் அக்ஷரா – என்ன தான் சொன்னார் ?

0
496
Akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. இந்த சீசனில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது அக்ஷரா என்று சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா மற்றும் வருண் இருவருமே நல்ல நண்பர்களாக, நல்ல புரிதலுடன் விளையாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு நண்பர்கள் என்றால் தெரிந்த இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு விளக்கமாக ரெண்டு பேரும் இருந்தார்கள். இதனாலே இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் திரண்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு கடுமையான டாஸ்க் இருந்தாலும் அதை எதிர்கொண்டு விளையாடினார் அக்ஷரா.

-விளம்பரம்-

அதற்காகவே இவருக்கு ஒரு தனி ஆர்மி உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அக்ஷராவுக்கு மிகப்பெரிய திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஹீரோவாக வருண் நடிக்க இருக்கிறார். மேலும், மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இதைப் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 20 கிலோ தங்கம் கடத்தல் கேசில் மீண்டும் அக்ஷராவை விசாரிக்க அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

கேரள தங்க கடத்தல் வழக்கு:

அக்ஷ்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே கேரள தங்க கடத்தல் வழக்கில் அக்ஷராவுக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து இருந்தது. 2013 ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் வழக்கில் அக்ஷரா ரெட்டி பெயர் அடிபட்டு இருக்கிறது. அதற்கான வீடியோவும் வெளியாகி இருந்தது. அதில் அக்ஷ்ரா கூறியது, கேரளா தங்க கடத்தலில் ஈடுபட்ட பயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்கு தெரியும். அதனால் சிபிஐ என்னையும் அழைத்து விசாரித்தார்கள்.

வீடியோவில் அக்ஷரா கூறியது:

எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்லி விட்டேன். நான் துபாய் எல்லாம் அடிக்கடி செல்லவில்லை. என் பாஸ்போர்ட்டை வேண்டுமானாலும் செக் பண்ணிக் கொள்ளுங்கள். எனக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் அக்ஷரா ரெட்டியின் பெயர் மாற்றத்திற்கும், முகம் சர்ஜரிக்கும் காரணம் என்ன என்று அக்ஷரா ரெட்டிக்கு நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் விசாரித்தபோது கூறியது, பயாஸ் என்பவர் மாடல்களுக்கான பி ஆர் ஓ. அக்ஷரா மாடலிங் செய்ததால் அக்ஷராவின் தோழிகள் மூலமாக பயாஸ் அறிமுகமானார்.

-விளம்பரம்-

தங்க கடத்தல் விவகாரத்தில் அக்ஷரா தொடர்பு:

அதை அக்ஷராவும் மறுக்கவில்லை. தங்க கடத்தல் விவகாரத்தில் அக்ஷரா பெயர் சிக்கியது உண்மைதான். பயாஸ் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களை எல்லாம் சிபிஐ விசாரித்து இருந்தார்கள். அதில் மொத்தம் 238 பேர்களை சிபிஐ விசாரித்தது. இதில் அக்ஷரா ரெட்டியும் ஒருவர். ஆனால், அக்ஷராவும் இந்த தங்க கடத்தலுக்கும் சம்பந்தமில்லை. அக்ஷரா பெயர் மாற்றம் செய்து இருப்பதாக காரணம் நியூமராலஜிகளுக்காகத் தான் செய்யப்பட்டது என்று கூறினார். இந்த பிரச்சனை முடிந்தது என்று கருதப்பட்ட நிலையில் அக்ஷயா ரெட்டியை போலீஸ் மீண்டும் விசாரித்து உள்ளது.

மீண்டும் அக்ஷ்ராவிடம் விசாரணை:

2013ஆம் ஆண்டு நடந்த 20 கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாக வடகரையை சேர்ந்த பாய்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் தொடர்பாக பாய்ஸ்க்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்க பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதனால் கடத்த சில தினங்களுக்கு முன்னர் கோழிக்கோடு அமலாக்க இயக்குனரகத்திற்கு விசாரணைக்காக அக்ஷரா ரெட்டி வரவழைக்கப்பட்டார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்கம் கடத்தல் கும்பலுடன் உடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வந்தார்கள். ஆனால், விசாரணை விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் அக்ஷராவுக்கு ஆதரவாக கருத்து போட்டு வருகிறார்கள்.

Advertisement