‘ஐய, அமலா பால் மாதிரி இருக்கேனே’ – அமலா பாலுடன் ஒப்பிட்டதால் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்துள்ள போட்டியாளர்.

0
3442
Akshara
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழில் இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்த பிக் பாஸ் சீசன் சீசன் 5 பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இந்த பிக் பாஸ் சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.

-விளம்பரம்-

கடந்த சீசன்களை விட இந்தமுறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி புத்தம் புது பொலிவுடன் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாள் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் நாளன்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.டது. வழக்கம்போல் வீடு ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கி இனிதே முடிவடைந்தது. அப்போது ராஜி அக்ஷராவை பார்த்து கூறிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அப்படி என்ன ராஜி அக்ஷராவை பார்த்து சொன்னார் என்றால், நீங்கள் அமலா போல் இருக்கிறீர்கள் என்று ராஜு சொன்னவுடன் அக்ஷரா ச்சீ, அமலாவா என்று கூறியிருக்கிறார். உடனே ஏன் இப்படி பேசுகிறீர்கள் அமலா எவ்வளவு பெரிய நடிகை தெரியுமா என்று சொல்லியிருக்கிறார். எந்த அமலாவை சொல்கிறீர்கள் நடிகர் நாகர்ஜுனன் மனைவியா என்று அக்ஷரா கேட்டார். உடனே ராஜு ஆமாம், அவரை தான் நாங்கள் சொல்கிறோம் என்று கூறினார். நான் தற்போது இருக்கும் அமலாபால் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன் என்று சொன்னார்.

அமலா என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நாகர்ஜுனன் மனைவி என்று சொன்னார். உடனே அக்ஷரா எனக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும் அவளைப் போல் இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி என்று கூறி இருந்தார். இப்படி இவர்கள் பேசிய கான்வர்சேஷன் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், அக்ஷரா ரெட்டி மாடல் அழகி ஆவார். இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த முறை பிக் பாஸ் சீசன் 5யில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement