அக்ஷயாவிற்கு கேரள ரசிகர்கள் அடித்த பேனர்- அடங்கப்பா பயங்கரமான PR டீம் போலயே

0
434
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 51 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். போன வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் வீடு என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருந்தது. மேலும், கடந்த வாரம் முழுதும் ஸ்டார்களுக்காக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் ரவீனா, மணி, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் அதிகப்படியான ஸ்டார்களை பெற்று இருந்தனர். பின் போன வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்கில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் பெரும்பாலானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்ந்தெடுத்தனர். ஆனால், எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக செய்துவிட்டார்களா என்று வாக்குவாதம் செய்த விசித்ரா, தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்னா செய்தார்கள். இதனை தொடர்ந்து ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கும் ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது.

நாமினேட் பட்டியல்:

இப்படி ஒரு நிலையில் தனக்கு கிடைத்த பவரை வைத்து மாயா மற்றும் அக்ஷயாவை நேரடியாக நாமினேட் செய்துள்ளார் விஷ்ணு. மேலும், இந்த வாரம் நிகழ்ச்சியில் பிராவோ, அர்ச்சனா, அக்ஷயா, மாயா, பூர்ணிமா விசித்ரா, ரவீனா, மணி ஆகியோர் இருக்கிறார்கள். இதில், அக்ஷயா, அர்ச்சனாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்து இருக்கிறது. அதோட நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே அக்ஷயா பெரிதாக எதிலும் ஈடுபடவில்லை. சுவாரசியமும் காண்பிக்கவில்லை. இவரும் போன வாரமும் நாமினேட் ஆகியிருந்தார். இந்த வாரமும் இவர் நாமினேட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

அக்ஷ்யா குறித்த தகவல்:

ஆனால், இவர் வெளியேறவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கேரளாவில் அக்ஷயா ரசிகர்கள் அவருக்கு வோட் செய்ய வேண்டும் என்று பேனரடித்து இருக்கிறார்கள். தற்போது அந்த புகைப்படம் தான் வெளியாகியிருக்கிறது. அக்ஷயா இன்னும் நிகழ்ச்சியில் இருப்பதன் காரணம் இவரை விட இன்னும் போராக பிராவோ மணி எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அக்ஷயா இன்னும் வீட்டில் தாக்கு பிடித்து இருக்க முடிகிறது. இதனால் அக்ஷயாவிற்கு இந்த வாரமும் வாக்குகள் அதிகமாக தான் கிடைத்திருக்கிறது. இந்த வாரம் கண்டிப்பாக பிராவோ வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் டாஸ்க்:

மேலும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ். இதனால் ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது.

Advertisement