உன் படம் 100% பிளாப் – அமீர் இயக்கும் புதிய படத்திற்கு சாபம் விடும் ரசிகர்கள். காரணம் அவரின் இந்த பேச்சி தான்.

0
617
Amir
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ காதல் கதைகள் உருவாகி இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் காணாமல் போய்விட்டது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கைகூடி காதல் ஜோடி என்றால் அது அமீர் – பாவனி தான். பிக் நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒன்றாக நடனமாடினர். அப்போதும் அடிக்கடி அமீர் தனது காதலை சொல்லிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவரது காதலை ஏற்றார் பாவனி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் இவர்கள் இவருக்கும் அஜித்தின் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் வாங்கிக்கொள்ளையையும் வங்கியில் நடக்கும் மோசடிகளையும் பற்றிய படமாக அமைந்து இருந்தது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்நிலையில் அமீர் மற்றும் பாவனி இரண்டு பேரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை அமீரே இயக்கவும் செய்ய இருக்கிறார். இப்படத்திற்கு சபீர் இசையமைக்கிறார். இந்த படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, விடிவி கணேஷ், அலீனா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சமீபத்தி நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய அமீர் ‘நான் இந்த படத்தின் கதையை சொல்லும் போது நீங்களே டைரக்ட் பண்றீங்களானு தான் எல்லாரும் கேட்டாங்க. எனக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும், இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. எதிர்ச்சியாக துணிவு படத்துல நடிச்சிட்டேன். எனவே, மீண்டும் டைரக்டர் ஆக வேண்டும் என்று தான் இந்த எண்ணம் வந்தது’ என்று கூறியுள்ளார். அமீரின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் பலரை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், கண்டிப்பாக உன் படம் flop அடையும் என்று சாபம் விட்டு வருகின்றனர்,

துணிவு படம் வெளியான போதே நெட்டிசன்கள் “நீங்க படத்தில் வந்ததே இரண்டு நிமிடம் தான். அதற்கு எதுக்கு ஓவர் பில்டப். என்று இருவரையும் கேலி செய்யும் வகையில் ட்ரோல் செய்தனர். இதற்க்கு பதில் அளித்த அமீர் ‘அஜித் அவர்களுடன் நடிக்கிறோம் என்றதில் ஆனந்தத்தில் எந்த படம், எந்த கதை, என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்கவில்லை. படத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதை விட அஜித் எங்களுடன் படத்திற்கு பிறகு மூன்று மணிநேரம் எங்களுக்கு அறிவுரை கூறினார். அதைத்தான் பெரிய விஷயம் தான் என்று நினைக்கிறோம்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement