என் அம்மா சாவுக்கு இவனும் காரணம்னு பேசாமலே இருந்தேன் – BB ஜோடிகளின் தன் அண்ணன் குறித்து பேசிய அமீர். கண்ணீர் விட்ட பாவனி

0
759
amir
- Advertisement -

முதன் முதலாக அமீர் தன்னுடைய அண்ணன் பற்றிய பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அமீர். இவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் சிறந்த நடன இயக்குனர் ஆவார். சிறு வயதிலேயே அமீர் தன்னுடைய பெற்றோர்களை இழந்து தனியாக போராடி வளர்ந்தவர். பின் தன்னுடைய அம்மா ஆசை படி நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அப்போது தான் இவருக்கு அலைனா அறிமுகம் கிடைத்தது. தற்போது அவர்களின் குடும்பத்தில் ஒருவராக அமீர் வாழ்ந்து வருகிறார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்டு பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால், பாவனி இருவரும் நண்பர்கள் என்று சொல்லிவிட்டார். அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

- Advertisement -

அமீர்- பாவனி காதல்:

மேலும், நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி:

அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். ஆனால், பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். கூடிய சீக்கிரத்தில் நல்ல பதில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்து இருக்கிறது. அதோடு நிகழ்ச்சியில் இவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் ஜோடிகள் 2 வின்னர்:

அந்த வகையில் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் அமீர்- பாவனி தான் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அமீர் முதன் முதலாக தன் அண்ணனை பற்றி கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிறுவயதிலிருந்தே அமீர் தன்னுடைய தாயை இழந்து ஒருவருடைய பாதுகாப்பில் தான் வளர்ந்து வந்தார். அவருக்கு ஒரு அண்ணன் மட்டும் இருக்கிறார்.

அமீர் அண்ணன் குறித்த தகவல்:

ஆனால், இது நாள் வரையும் அமீர் தன்னுடைய அண்ணனை பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசியது கிடையாது. முதல் முறையாக அமீர் விஜய் டிவியில் தன்னுடைய அண்ணனை பற்றி பேசுகிறார். அதில் அவர், எனக்கு இவன் மீது நிறைய கோபம் இருந்தது. காரணம், என் தாய் சாவிற்கு இவனும் ஒரு காரணம் என்று தான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். இவன் என்னைவிட நன்றாக நடனமாடுவான் என்றெல்லாம் அமீர் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement