ஒரே நாளில் எல்லாம் போச்சி, எல்லாரும் அசிங்க அசிங்கமா திட்றாங்க – அமீரை தத்தெடுத்த தந்தை வேதனை பேட்டி.

0
1454
Amir
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அமீரின் கடந்து வந்த பாதை :

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். நேற்றய நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில்அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருப்பார்கள். அதுவும் அம்மாவின் உடலை அடக்கம் செய்ய கூட காசு இல்லாமல் வீட்டில் உள்ள டிவி சோபாவை விற்றேன் என்று அமீர் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் கலங்கியது. அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார்.

- Advertisement -

அமீரை தத்தெடுத்த தம்பதி :

யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருளாக இவரை சூழ்ந்து இருக்கிறது. தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா என்று கூறி இருந்த அமீர் அந்த குட்டி பெண்கள் தான் என் வாழ்க்கை மாற்றினார்கள் என்பதும் அவர்களின் அம்மா ஷைஜி மேம் தான் எனக்கு எல்லாமுமாக இருக்க போகிறார் என்று எனக்கு தெரியாது.

தத்தெடுத்த தந்தை அஷ்ரப் :

அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று தனக்கு சோறு போட்டு வளர்த்ததாக கூறியிருந்தார். மேலும், அவர்கள் வீட்டில் தான் முட்டை, கறி என்பதையே பார்த்தேன். மேலும், நான் கிறிஸ்டியனாக இருந்தேன். அவர்களுக்காக தான் நான் முஸ்லிமாக மாறினேன் என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அவன் அப்படிபட்ட பையன் கிடையாது :

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஷ்ரப் ‘அமீர் அப்படிபட்ட பையன் கிடையாது. அவன் இதுவரை எந்த பொண்ணையும் லவ் பண்ணது கிடையாது. இதுநாள் வரைக்கும் அவன் எந்த பொண்ணுகிட்ட ரோட்ல நின்னு பேசினது இல்லை, எந்த பொண்ணு கூடவும் சுத்துனது இல்ல. நிறைய பேர் சொல்றாங்க பாவனி நோ சொல்லியும் அமீர் அப்படி செய்தான் என்றால் பிக் பாஸ் சொல்வார் இல்ல. அப்படி இருந்தால் அவனை வெளியில் அனுப்பிடுங்க.

பாவனி ஏன் இத செய்யல :

அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிறான் என்பது எனக்கு தெரியும். ஆனால், ஒரு நாளில் அவன் எடுத்த பெயரை எல்லாம் அவன் அழித்துவிட மாட்டான். ஆனால், அவன் அந்த ஒருநாள் செய்ததை பார்த்துவிட்டு பலரும் அசிங்க அசிங்கமாக கமெண்ட்ஸ் போடுகிறார்கள். அதையெல்லாம் என்னால பார்க்க முடியல. உண்மையிலேயே அமீர், பாவனிக்கு கிஸ் கொடுத்தது தப்புன்னா அத பிக் பாஸ் சொல்லி இருப்பாரே. அதே போல பாவனிக்கு பிடிக்கலன்னா அந்த இடத்தை விட்டு எழுந்து போய் இருக்கனும், இல்ல அவன் மேல காரி துப்பி இருக்கலாம், அவன அடிச்சி இருக்கலாம். ஆனால், அந்த பொண்ணு இதை எதையும் செய்யவில்லை. ஆனால், அந்த பொண்ண பத்தி எனக்கு பேச ரைட்ஸ் இல்ல என்று கூறியுள்ளார்.

Advertisement