பாவனி மீது இருந்தது உண்மையான காதலா ? முத்தம் கொடுத்தது ஏன் ? முதன் முறையாக மனம் திறந்த அமீர்.

0
1072
amir
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கி வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அந்த வகையில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் நடன இயக்குனர் அமீர். இவர் நிகழ்ச்சியில் மிக திறமையாக விளையாடி இருந்தார். அதிலும் கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருந்தார்கள். அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார்.

-விளம்பரம்-

பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டு விட்டார். ஆனால், அவர் அம்மா இறந்த காரணத்தை சொல்லாமல் மறைத்து விட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கையை வாழ தொடங்கினார் அமீர். பின் தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கினார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா. இவர்கள் தான் அமீர் வாழ்க்கையையே மாற்றியவர்கள். மேலும், அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் அமீரை வீட்டுக்கு அழைத்து சென்று வளர்த்தார்களாம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர்:

பின் பல நிகழ்ச்சியில் அமீர் நடன இயக்குனராக பணியாற்றி வந்து உள்ளார். அதன் மூலம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. கடந்த வாரம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தும் சோசியல் மீடியா முழுவதும் அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்த பேச்சு தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அமீர்- பாவனி அதிரடி முத்தம்:

இதேபோல் முதல் சீசனில் ஓவியா-ஆரவ் மருத்துவ முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நிகழ்ச்சியின் போதே அமீர்,பாவனிக்கு முத்தம் கொடுத்தது குறித்து பலரும் கடுமையாக அமீரை தாக்கி பேசி இருந்தார்கள். பின் நிகழ்ச்சி முடிந்தும் அதை பற்றியே விமர்சனம் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

விளக்கம் கொடுக்க பேட்டி அளித்த அமீர்:

நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே போகும் போது பாவனி மட்டும் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். எல்லா பிரச்சனையிலும் அவர் மாற்றிக் கொண்டு தனியாக இருப்பதை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருந்தது. அதனால் அவரிடம் நான் பேசுவேன். அப்படித்தான் எங்கள் இருவருக்கும் நட்பு உண்டானது. அதற்குப் பிறகு நான் வெளிப்படையாக பாவனியை காதலிப்பதை சொல்லினேன். ஆனால், அவர் நட்பாக இருக்கலாம் என்று சொன்னார். அது அவருடைய விருப்பம். நான் என்னுடைய விருப்பத்தை நிகழ்ச்சியில் இருக்கும் போதும் சரி இப்போதும் சரி சொல்லி விட்டேன். ஆனால், அவர் நட்பாக இருக்கலாம் என்று உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால், அந்த முத்தக்காட்சியை குறித்து எல்லோரும் சோசியல் மீடியாவில் பல்வேறு விதமாக கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

நாங்கள் நண்பர்கள் என்று சொன்ன அமீர்:

சொல்லப்போனால், நான் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படி கொடுத்திருந்தால் பிரச்சனை நடந்திருக்கும். நான் கொடுக்கும் போது அவரும் எதுவும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் குற்றம் செய்தது போல் பேசுகிறார்கள். அப்போது இருக்கும் மனநிலையில் என் காதல் உணர்வில் நான் கொடுத்துவிட்டேன். எனக்கு அது தவறாகவே தெரியவில்லை. இதை ஏன் இப்படி பெரிசு பண்ணி சர்ச்சை ஆக்குகிறீர்கள்? என்று தான் தெரியவில்லை. இன்னமும் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement