ரெண்டாவது நாளே எங்க லவ் மேட்டர் அஜித் சாருக்கு தெரிஞ்சதும் இதான் சொன்னார் – அமீர் பாவனி சொன்ன சூப்பர் விஷயம்.

0
533
pavni
- Advertisement -

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், ஜி.எம் சுந்தர், மகாநதி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, என பலர் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸில் பிரபலமான காதல் ஜோடிகள் அமீர், பாவனி மற்றும் சிபி என மூவரும் துணிவு படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படக்குழுவில் உள்ள பலர் பிரபல செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வகையில் துணிவு படத்தில் நடித்த அமீர் மற்றும் பாவனி இருவரும் சமீபத்தில் ஊடகம் ஒன்றில், தாங்கள் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

- Advertisement -

பதர்ட்டமாக இருந்தோம் :

துணிவு படத்தின் தொடக்கத்தில் இவர்கள் இருவருக்கும் துணிவு படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்த போது அவர்களை யாரோ கலாய்க்கின்றனர் என்றுதான் நினைத்துள்ளனர். பின்னர் தான் தெரிகிறது அது உண்மை என்று. அதற்கு பின்னர் இவர்களில் பாங்காங்கில் சீவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் கூறுகையில் தங்களின் முதல் நாளில் அதிக பதர்த்ததுடன் இருந்தார்களாம்.

அந்த 15 நாட்கள் :

என்னேற்றால் எப்போதுவது பார்ப்போமா என்று இருந்த அஜித் தங்களுக்கு அருகே அமர்ந்திருக்கிறார். அவர் எல்லோரிடமும் அன்பாக பழகினார். தான் வரும் போது யாரும் எழுந்து நிற்க கூடாது என்றும், எழுந்து நின்றால் பேவிகால் போட்டு ஒட்டி விடுவதாகவும் கூறினாராம். அதற்கு பிறகு அஜித்துடன் நடிக்கிறோம் என்ற பதர்ட்டமே இல்லையாம், இவர்கள் நடித்த அந்த 15 நாட்கள் மிகவும் அற்புதமானது என்றும் கூறினார்கள்.

-விளம்பரம்-

மேலும் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்ன நடந்தது என்று நினைவில் உள்ளதாகவும், அந்த அளவிற்கு அஜித் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றும் கூறினார்கள். அதோடு தங்களுடன் சகஜமாக பழகி அவர் எங்களுடைய காதலை இரண்டாவது நாள் தான் அறிந்து கொண்டார். அப்போது எங்களை எங்களுக்கே அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் தான் படத்தின் கடைசி நாள் வந்தது. அந்த நாளை எங்களால் மறக்க முடியாது.

கடைசி நாள் சம்பவம் :

கடைசி நாளில் அமீர் அஜித்திற்கு போன் செய்திருக்கிறார் ஆனால் அஜித் எடுக்கவில்லை. பின்னர் அஜித் திரும்பவும் போன் செய்து சாரி அமீர் நான் பேக்கிங் செய்து கொண்டிருந்தேன் அதனால்தான் என்னால் போன் பேச முடியவில்லை என்று கூறி எங்கள் மூவரையும் ஒரு இடத்திற்கு அழைத்தார். அங்கு நான் பாவனி, சீவி மற்றும் அஜித் மட்டும் தான் இருந்தோம். அங்கு எங்களை அமரவைத்து பல விஷியங்களை எங்களிடன் பேசினார். பின்னர் அந்த சந்திப்பு முடிந்து அவர் செல்லும் போது பை சி யூ என்று கூறியது தங்களுடைய நினைவிலேயே நிற்கிறது என்று கூறினார்கள். மேலும் அந்த கடைசி நாளை தங்களால் மறக்க முடியாது என்றும் கூறியிருந்தனர்.

Advertisement