சூப்பர் சிங்கரில் கௌரவமாக இருந்து பிக் பாஸுக்கு சென்று டேமேஜ் ஆன அனந்த் வைத்தியநாதன் என்ன ஆனார்

0
2523
Ananth
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பாடகர் அனந்த் வைத்தியநாதன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசையமைப்பாளர்களை உருவாக்கியும் இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி இருக்கிறார். அதோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பாடகர்களாக்கியும் இருக்கிறார். ஆனால், சில வருடமாகவே இவர் நிகழ்ச்சியில் காணவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகலாம் என்று பல கனவுகளுடன் நுழைந்த அனந்த் வைத்தியநாதனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் நுழைந்த இவர் இரண்டாவது எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். அதோடு இவர் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறியிருந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போதே என்னிடம் கலந்து கொள்ள கேட்டிருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்னது:

ஆனால், அப்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இரண்டாவது சீசனில் கேட்டவுடன் ஒப்புக்கொண்டேன். 21 நாட்களில் இரண்டாவது போட்டியாளராக நான் வெளியேற்றி விட்டேன். இந்த நிகழ்ச்சியில் நான் அதிகமான நாட்கள் உள்ளே இல்லை என்றாலும் நிகழ்ச்சியிலிருந்து மறக்க முடியாத பல நினைவுகள் எனக்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மனதிற்கு ஒரு பெரிய மெடிசன். யாருக்கு எப்படியோ தெரியாது. ஆனால், எனக்கு அப்படித்தான்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்:

வெளியுலக தொடர்புகள் இல்லாமல் இருந்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு மன சம்பந்தமான விளையாட்டு தான் இது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிரபலமாக பேசப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அப்படியே காணாமல் போய்விடும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பெரிய அளவு வாய்ப்பு கிடைத்துவிடும், வாழ்க்கை மாறிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் சும்மா பொய் தான்.

அனந்த் வைத்தியநாதன் சொன்ன அறிவுரை:

நம்முடைய திறமை இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற உழைப்பு வேண்டும். அப்படி தான் நம்முடைய பயணம் இருக்கும். அதற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றவர்கள் யாராவது நல்ல நிலையில் இருக்கிறார்களா? என்று நீங்களே சொல்லுங்கள். பிக் பாஸில் இருக்கும்போது தான் மக்களுடைய மரியாதையும் ஆதரவும் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். வெளியே வந்த பிறகு அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். பிக் பாஸில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கூட இதை மனதில் வைத்துக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

Advertisement