அர்ஜுன் கிட்ட இருந்து கமல் கத்துக்கணும் – சர்வைவரில் போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் அர்ஜுன்.

0
37726
survivor

ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பிரேட்டிற்காக புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரே நேரத்தில் பிரபலமான மூன்று சேனல்களில் உலகம் முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது, இதில் தமிழில் மட்டும்தான் தொடர்ந்து கமல் தொகுப்பாளராக இருந்து வருகிறார், இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் தொகுப்பாளராக ஆக்சன் கிங் அர்ஜுன் களம் இறங்கி இருந்தது இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதையும் பாருங்க : சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி.

- Advertisement -

சர்வ இவர் நிகழ்ச்சி ஒன்றும் புதிதான ஒரு நிகழ்ச்சி கிடையாது. ஏற்கனவே இது பல்வேறு வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சிதான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு இது மிகவும் புதுமையான ஒரு நிகழ்ச்சியாக தான் இருந்தது. அதேபோல இந்த நிகழ்ச்சியில் வரும் டாஸ்க்குகள் பிக் பாஸுக்கே போட்டி கொடுக்கும் விதமாக தான் இருக்கிறது.

அதிலும், கடந்த சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ஜுன் போட்டியாளர்களை வறுத்து எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்காடர்கள் அணியில் இருந்த சரண் செல்போனை பயன்படுத்தி இருந்தார். இதுகுறித்த அவரிடம் அர்ஜுன் பேசிய போது ‘உங்களுக்கு அறிவு இல்லையா’ என்று கடும் கோபத்துடன் திட்டினார்.

-விளம்பரம்-

அதேபோல சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கூட உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடுங்கள் என்று சரணை மீண்டும் வறுத்தெடுத்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி இருந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்த அர்ஜுன், நீங்கள் பேசும் போதெல்லாம் கேமரா வைத்தால் எனக்கு பிரைவசி வேண்டும் என்று சொல்கிறீர்களாமே.

பிரைவசி வேண்டுமென்றால் வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே, நீங்கள் பாத்ரூம் போவது மட்டும்தான் இந்த நிகழ்ச்சியில் பிரைவசி என்று வறுத்தெடுத்த உள்ளார் அர்ஜுன். இப்படி ஓர் நிலையில் அர்ஜுனை போல கமல், பிக் பாஸை தொகுத்து வழங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்தி பிக் பாஸில் சல்மான் கான், தவறு செய்யும் போட்டியாளர்களை வெளுத்து வாங்கிவிடுவார். ஆனால், தமிழில் கமல், போட்டியாளர்களை கடுமையாக பேசுவது கூட கிடையாது. எதாவது தவறு செய்தால் கூட அதற்கு அறிவுரை மட்டுமே கூறிவிட்டு அதனையும் டிப்ஸ் என்று சொல்லிவிடுகிறார். ஆனால், அர்ஜுனின் இந்த வீடியோவை எல்லாம் பார்த்த ரசிகர்கள், அர்ஜுன் பிக் பாஸ் தொகுப்பாளராக போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement