டீக்கடையில் கூட நிம்மதியாக டீ குடிக்க முடியல – பிக் பாஸ் பிரபலங்களின் கணவர்களின் ஆதங்கம். வைரலாகும் வீடியோ இதோ.

0
819
anitha
- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா- அனிதா சம்பத் இருவரின் கணவர்கள் வருத்தத்தோடு கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை வட்டாரத்தில் சாதனை பெண்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா. அனிதா சம்பத் நியூஸ் ரீடர் ஆக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். பின் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது இவர் சின்னத்திரை பிரபலமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
anitha

சமீபத்தில் சொந்த வீடு கட்டி குடி புகுந்த அனிதாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், அனிதா உடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் என்றால் அவருடைய கணவர் பிரபா தான். இவர்களுடைய காதலும் பாசமும் அனைவரும் அறிந்ததே. காதல் பற்றியும், தன்னுடைய கணவர் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா அதிகம் பேசி இருந்தார். அதேபோல விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவை பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர். பின் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகியிருந்தார்.

- Advertisement -

நிஷா பற்றிய தகவல்:

அதன் பின் நிஷா பல நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிஷா சென்று இருந்தார். ஆனால், அவர் நெகட்டிவான கமெண்டுகள் உடன் தான் வெளியே வந்து இருந்தார். ஆனாலும், தன்னுடைய விடா முயற்சியை கைவிடாமல் யூடியூப் சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்து வருகிறார் நிஷா. தற்போது இவர் வெள்ளித்திரையிலும் நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய வெற்றிக்கு மிகப் பெரிய பலமே அவருடைய கணவர் கட்டத்துரை தான்.

நீயா நானா நிகழ்ச்சி:

இந்த நிலையில் அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவருமே தன் கணவருடன் இணைந்து நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார்கள். தற்போது அதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கோபிநாத் பணியாற்றி வருகிறார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் நிஷா கணவர் சொன்னது:

வார வாரம் இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு தலைப்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையில் ஜொலிக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றார்கள். அதில் அறந்தாங்கி நிஷாவின் கணவர் மிகவும் வருத்தத்துடன் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது, செலிபிரிட்டியின் கணவராக இருப்பதால் டீக்கடையில் கூட நிம்மதியாக டீ குடிக்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் இந்த டீக்கடையில் குடிக்கலாமா? என்று கேட்கின்றனர்.

அனிதா கணவர் சொன்னது:

நானும் மனிதன் தானே! என்று நிஷாவின் கணவர் கட்டதுரை கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அனிதாவின் கணவர் பிரபாகரன், காதலிக்கும்போது பைக்கில் அதிகம் வெளியே செல்வோம். ஆனால், இப்போது காரில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கோம். ஆனால், அனிதா அடிக்கடி பைக்கில் வெளியே போகலாமா? என்று கேட்பார். நான் அழைத்து செல்ல மாட்டேன். உண்மையில் நானும் அந்த பயணத்தை நிறைய மிஸ் செய்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இருவரும் தங்களுடைய வருத்தத்தை நிகழ்ச்சியில் கூறி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement