ஐயோ ஐயோ, தயவு செஞ்சு அழாத அருவருப்பா இருக்கு. அனிதா குறித்து பிரபல நடிகை ட்வீட்.

0
1352
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

- Advertisement -

சனம் ஷெட்டி வெளியேறிய போது மற்ற போட்டியாளர்களை விட அனிதாதான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அனிதா மற்றும் சனம் ஷெட்டிக்கு ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் இறுதி வாரங்களில் சனம் ஷெட்டி மற்றும் அனிதா இருவருமே நல்ல தோழிகளாக மாறி இருந்தார்கள். அதுபோக இந்த வாரம் அனிதாதான் வெளியேறி இருப்பார் என்று பலரும் எதிர் பார்த்தனர். ஆனால், சனம் செட்டி வெளியேறி இருந்தார். சனம் வெளியேறிய போது அனிதா தேம்பி தேம்பி அழுதார்.

அனிதாவின் இந்த கண்ணீரை பார்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஸ்ரீ பிரியா, அனிதா அழுதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘அய்யோ…. தயவு செஞ்சு அழாத… அருவருப்பா இருக்கு’ என பதிவிட்டுள்ளார். ஸ்ரீபிரியாவின் இந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த வாரமே அனிதா தான் செல்வதாக இருந்தது. இந்த வாரமும் அனிதா கேப்டன் ஆகி நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement