அடேங்கப்பா, இது உலக மகா நடிப்பு – பட்டப்பெயர வச்சிட்டு நாடகமாடிய அனிதா. இதோ குறும்படம்.

0
7392
ani

இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் அனிதா, இந்த வார சுவாரசியம் குறைவான போட்டியாளராக ரியோவை தேர்ந்தெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், எல்லாரும் தனித்தனியாக பெயர் வைத்துவிட்டு, இப்போதுஅனிதா அந்த பெயரை சொல்லுவார் என்று சொன்னபோது என்னை கோர்த்து விடுவது போல எனக்கு தோன்றியது. இதனால் ரியோ பெயரை சொல்கிறேன் (சுவாரசியம் குறைவான போட்டியாளராக) என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான நிஷா இதற்கு ஐடியா நான் கொடுத்தேனா? பாஸி என்ற பெயரை நான் வைத்தேனா? என்று சொன்னதற்கு நீங்கள் இந்த கான்செப்ட்டை வேண்டாம் என்று சொல்வது தானே என்று கூறினார் அனிதா. ஆனால், உண்மையில் அர்ச்சனாவிற்கு பாஸி என்று பட்டப் பெயர் வைத்ததே அனிதா தான் என்பது குறும்படத்தில் தெளிவாகி இருக்கிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது . அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும்.ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அர்ச்சனா, கேப்ரில்லா, பாலாஜி, சோம் சேகர், ரம்யா பாண்டியன், ஜித்தன் ஆகிய 6 பேர் ரோபோவாக இருந்தனர். அதே போல ரியோ, ஆரி, அனிதா, பாலாஜி, நிஷா, ஆஜீத் ஆகியோர் மனிதர்களாக இருந்தனர். இந்த டாஸ்க்கில் அர்ச்சனா குழு முதலில் ரோபோவாக விளையாடி இருந்தனர் இந்த டாஸ்க் ஆரம்பிக்கும் முன்னர், ஆரி, நிஷா, அனிதா ஆகிய மூன்று பேரும் அமர்ந்து ரோபோக்களாக இருந்த அனைவருக்கும் பட்டப் பெயரை வைத்தார்கள். இதில் அனிதா தான் அர்ச்சனாவிற்கு பாஸி ரோபோ, ஜித்தன் ரமேஷிற்கு ராஜா வீட்டு கன்னுகுட்டி ரோபோ, சோம் சேகருக்கு பப்பட் ரோபோ, ரம்யாவிற்கு சாப்ட் ஹர்ட் ரோபோ என்று வைத்தார்.

அதன் பின்னர் டாஸ்கின் போது, அனிதா எல்லா ரோபோவின் பெயரையும் சொல்வார் என்று பாலாஜி தான் கூறி இருந்தார். ஆனால், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ரியோ தான் அனைவருக்கும் பெயர் வைத்துவிட்டு அதை என் மூலமாக சொல்ல வைத்து கோர்த்துவிட்டார்கள் என்று கூறி ரகளை செய்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த குறும்படத்தின் மூலம் அனிதாவும் பட்டப் பெயர் வைத்தார் என்பது தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement