அந்த ஆடியோவ நான் ரிலீஸ் பண்ணல அவர் தான் பண்ணாரு, உனக்கு தைரியம் இருந்தா அவர் கிட்ட மோது – கோர்த்து விட்டு ஆடியோக்களை நீக்கிய அனிதா.

0
15077
anitha
- Advertisement -

சமீபத்தில் பாலாஜி தனக்கு கொடுக்கப்பட்ட விருதை திருப்பி அளித்து இருந்தார். விருது மேடையில் reviewer களை பற்றி பேசியதை யூடுயூபில் ஒளிபரப்பாததால் விருதை திருப்பிக்கொடுப்பதாக அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அனிதா சம்பத், விரைவில் இவர்களின் முகமூடி கழல போகிறது. மற்ற போட்டியாளர்களை மட்டமா பேச ஆளுக்கு 30 ஆயிரம் குடுத்து பேட்டி எடுத்த மேட்டரும் சீக்கிரம் வெளிய வரும். பெருமையாக இருக்கிறது பாலா என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல நேர்மையாக இருப்பவர்கள் வெளியேறிய பின்னர் பேட்டி கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பற்றி தவறாக பேசவில்லை. அப்படி செய்தவர்கள் 20 ஆயிரம் 30 ஆயிரம் பணத்திற்காக செய்தார்கள்.வயித்தெரிச்சல்ல அவர்கள் விரைவில் வெளியேறி விட்டார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ள நேரடியாக மோத முடியாத கோழை, வெளியே வந்து நினைச்சதை பேசுவாங்க.

இதையும் பாருங்க : உண்மையா மலருக்கு மெமரி லாஸ்னா, அப்புறம் எப்படி இத சொன்னா – இத நம்பி 100ரூ பெட் கட்டி இருக்கேன் – ரசிகரின் சந்தேகத்தை தீர்த்து வைத்த பிரேமம் பட இயக்குனர்.

- Advertisement -

பாலாஜி சொன்னதும் அனிதா சொன்னதும் behindwoods யூடுயூப் பக்கத்தில் பிக் பாஸ் review செய்த ரவீந்திரன் தான் என்றும் பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு ரவீந்தரனும் பதிலடி கொடுத்தார்.அதில் அனிதா நீ சிம்ப்ளி வேஸ்ட், தவறான செய்தியை எப்போதுமே சொல்லக்கூடாது. சுரேஷ் மற்றும் வேல்முருகன் பணத்தை வாங்கிக் கொண்டு மற்றவர்களை தவறாக பேசியதாக நீங்கள் தவறான கருத்தை சொல்லக்கூடாது. இதுபோல ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வது கேவலமாக இருக்கிறது.மேலும் நீங்கள் 85 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்தேன் என்று பெருமையாக சொன்னீர்கள்.

ஆனால்,உண்மையில் நீங்கள் இருந்த போது உங்களை விட மற்றவர்களை வெளியில் அனுப்ப மக்கள் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டார்கள்.எப்போது நீங்க ஆரியை பார்த்து பேசாதீங்க ஆரி என்று சொன்னீர்களே அன்றே ரசிகர்கள் உங்களுக்கு சாரி சொல்லி வெளியில் அனுப்பி விட்டார்கள். இன்னமும் ஆரியின் வெற்றியை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் சென்று கொண்டு இருக்க, அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் ரவீந்தரனுடன் போனில் ஆரியின் வெற்றி பற்றி பேசிய ஆடியோக்களை ரெக்கார்ட் செய்து வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த ஆடியோ ஆதாரங்களை தான் வெளியிடவில்லை என்றும் பாலாஜி தான் இந்த ஆடியோவை வெளியிட்டார். உங்களுக்கு தைரியம் இருந்தார் அவர்கிட்ட மோதுங்க என்று கூறி இருந்தார். மேலும், இவரது கணக்கில் வெளியிடப்பட்ட ஆடியோக்களையும் நீக்கி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரவீந்தர், ஆறு மாதத்துக்கு முன்னாடி பேசிய ஆடியோவை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறீர்கள் நான் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தேன் என்பதற்காக என் பெயரையும் ஆரி பெயரையும் கெடுக்க பாக்குறீங்க. அதுபோக பாலாவையும் அவர் ரசிகர்களையும் தூண்டி விடுகிறீர்கள். நீ செய்யும் கேவலமான செயலை நினைத்துகூட பாக்க முடியல. உன்னால ஒரு தனி மனிதனோட வெற்றியை ஜீரணிக்க முடியல. இப்போ ஒரு கட்டுக்கத கட்ற. இதுக்கு உனக்கு 6 மாசம் தேவப்பட்டுச்சு. இத கேட்பவர்களுக்கு தெரியும் நோக்கத்துடன் இதை நீ ரெக்கார்ட் செய்து இப்போ கதை கட்றனு.

Advertisement