பீரியட்ஸ் கறையோட 2 கி.மீ நடந்து போனேன் – தான் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமுடன் பதிவிட்ட அனிதா சம்பத்.

0
368
anitha
- Advertisement -

பிக் பாஸ் அனிதா பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
anitha

மேலும், இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா:

இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. இதிலும் இவர் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அனிதாவின் புது வீடு:

சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மந்திரப்புன்னகை தொடரில் ஹீரோயினி தோழியாக நடிக்கிறார். இந்நிலையில் அனிதா அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், என் “housing board anitha” to “house owner Anitha Sampath” பயணம் அவ்வளவு எளிதானது இல்ல.

-விளம்பரம்-

அனிதா பதிவு:

நான் விடியற்காலையில் எழுந்து செய்தி வாசிக்க போகும் போது வீட்டில் எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. நான் வேலை முடித்து விட்டு லேட்டாக வரும் போது எல்லாரும் தூங்கிடுவாங்க. அப்பா – அம்மா கூட நேரம் செலவிட முடியவில்லை என்று எனக்கு கவலையாக இருக்கும். ஆனாலும், சின்ன ஷோ, பெரிய ஷோனு பாக்காமல் நேரம் காலம் பாக்காமல் நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரனும் உண்மையாக, நேர்மையாக, நல்லா சம்பாதிக்கணும் என்று மட்டுமே நினைத்து உழைப்பேன். எனக்கு பக்க பலமாக இருந்தது பிரபா. மணிக்கணக்காக phone-ல் அப்றம் …. அப்றம்…னு கொஞ்சி சினுங்குற சினிமா காதல் இல்லை எங்க காதல்.

தங்கள் வீடு வாங்கிய சூழ்நிலை:

ஆரம்பத்தில இருந்தே ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல். ரெண்டு பேரும் மீடியா. ஆனால், வேற வேற வேலைகள். எங்க குடும்பங்கள், எங்க முன்னேற்றம், சேமிப்பு, எங்க வேலை, எங்க கனவுகள், இதை பத்தி தான் அதிகம் பேசிப்போம். இதன் ஊடே எங்க அன்பு, பாசம், காமெடி, சிரிப்பு, காதல் எல்லாமும் சைக்கிள் வாங்க முடியாமல் வடபழனி to கோவூர் நடந்தே போற பிரபா கதை. நாப்கின் வாங்க காசில்லாமல் 2km பீரியட்ஸ் கரையோடயே நடந்து ட்யூஷன் எடுக்கிற வீட்ல நாப்கின் வாங்கி மாத்துன என்னோட கதை. இப்படி எங்க சொந்த struggle stories தான் எங்களுக்கு மாத்தி மாத்தி inspirations. எங்க 6 வருட காதல், ரெண்டு பேருடைய கனவையும் ஒரே கனவா ஆக்குச்சு. We chased our dreams together and this happened. 29 & 30 வயசுல சொந்த வீடு. இவ்வளவு இளமைக்காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலயும் இதுதான் முதல்முறை என்று கூறி இருக்கிறார்.

Advertisement