சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பக்கத்தில் இந்த 2 காமெடி நடிகர்களா ? (நல்ல படத்த கெடுக்காம இருந்தா சரி)

0
1317
sundara

சினிமாவை பொறுத்த வரை மற்ற மொழிகளில் இருந்து படங்களை ரீ – மேக் செய்வது ஒருபுறம் இருந்தாலும் தமிழில் ஏற்கனவே வெளியான பழைய படங்களை ரீ – மேக் செய்வதும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில காலமாகவே தமிழ் சினிமாவில் வெளியான காமெடி படங்களை ரீ – மேக் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட காசே தான் கடவுளடா படத்தின் தமிழ் ரீ – மேக் கூட அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழில் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ்சின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

Free Tamil Movie Downloads: Sundara Travels (2002)

இயக்குனர் அசோகன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முரளி, வடிவேலு, ராதா, வினுச்சக்ரவர்த்தி, மணிவண்ணன் போன்ற பலர் நடித்த இந்த படத்தில் ஒரு ஓட்டை பஸ்ஸை வைத்து தான் முழு படமும் எடுக்கப்பட்டு இருந்தது. அதிலும் இந்த படத்தில் வந்த எலி கூட இந்த படத்திற்கு ஒரு முக்கிய பங்கை கொடுத்தது.

இதையும் பாருங்க : இன்னும் கொஞ்சம் ஃப்ரீ பண்லாம்ல – அமலா பாலின் லேட்டஸ்ட் கிளாமரை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த முரளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். அதேபோல இந்த படத்தில் இரண்டாம் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவும் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதற்கு தடை பெற்று இருப்பதால் அவரும் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை இருக்கிறது.

Dennis Manjunath's 'Trip' is at the final stages, reveals Sunaina | Tamil  Movie News - Times of India

அதனால் இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முரளி மற்றும் வடிவேலுவின் கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகிபாபு மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் பாகம் அளவிற்கு இந்த இரண்டாம் பாகம் வரவேற்ப்பு பெரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

-விளம்பரம்-
Advertisement