இந்த டீம் கூட சேராதீங்க மோசமானவங்க – ரசிகரின் கமென்டிற்கு அனிதா பதிலடி.

0
1829
BB

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ்.அதே போல விஜய் டிவி பிரபலன்களான ரியோ, நிஷா, கேப்ரில்லா ஆகியோர் அர்ச்சனாவுடன் சேர்ந்து லவ் பேட் என்ற குழுவையும் ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கவில்லை என்பது தான் சோகம். உண்மையில் இந்த சீசன் ஆரம்பித்த போது ரியோ மீது ரசிகர்களுக்கு பல எதிர்பார்புகள் இருந்தது.

- Advertisement -

ஆனால், அர்ச்சனா உள்ளே நுழைந்த பின்னர் தான் ரியோவின் தனித்தன்மை முற்றிலும் மறைந்து போனது.பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து 10 நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்றது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அனிதா சம்பத் வெளியிட்டு இருந்தார். அதில், பெண் போட்டியாளர்களான அர்ச்சனா, சம்யுக்தா, ரேகா, நிஷா, ஷிவானி, ஆகியோர் இருக்கின்றனர்.இதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த டீம் கூட சேராதீங்க மோசமானவங்க என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அனிதா. எல்லாரும் நல்லவங்க தான். கேம்லாம் முடிஞ்சி போச்சு என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement