‘இத பண்ற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருந்தா’ – டபுள் மீனிங் கமெண்டுக்கு அனிதா கொடுத்த கூலான பதில்.

0
1162
anitha
- Advertisement -

செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா வரை சென்ற பல நடிகைகளில் அனிதா சம்பத்தும் ஒருவர். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-

இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத்.

- Advertisement -

கர்ப்பமாக இருக்கிறாரா அனிதா :

அதே போல தனது கணவர் பெயரை சொன்னதால் ‘என் புருஷன் பேர சொல்லாதீங்க ஆரி’ என்று உதட்டை கடித்து எச்சரித்தார் அனிதா. அந்த அளவிற்கு தனது கணவர் மீது மிகுந்து அன்பு கொண்டவர் அனிதா. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-77.jpg

ரசிகர் போட்ட டபுள் மீனிங் கமன்ட் :

இந்த வீடியோவில் இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘இந்த வீடியோ போடற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருக்கலாம். கர்ப்பமாகி இருப்பாங்க என்று கமெண்ட் செய்து இருந்தார். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்டுகளை பார்த்தால் வறுத்து எடுத்துவிடும் அனிதா சம்பத் இந்த கமெண்ட் இருக்கு சிரிப்பது போன்ற எமோஜி பதிவிட்டு பதில் அளித்து இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-78-768x1024.jpg

பெயரை டேமேஜ் செய்துகொண்ட அனிதா :

சீசன் 4ல் பங்குபெற்ற அனிதா சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு வந்தார்.

சர்ச்சையில் சிக்கிய அனிதா :

அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு. இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர். அதே போல அடிக்கடி டபுள் மீனிங்கில் கூட பேசி சர்ச்சையில் சிக்கினார்.

Advertisement