நான் குழந்தை மாதிரி விளையாடியதை பார்த்து என் குடும்பத்தினர் இதான் சொன்னார்கள் – அனிதா சம்பத்.

0
518
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
anitha

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சமூக வலைதளத்தில் பல ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் கடந்த இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.

- Advertisement -

வெளியேறிய அனிதா :

ஜூலியை தொடர்ந்து தாமரை மற்றும் நிரூப் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தனர். எனவேய, சதீஷ், அனிதா, சுருதி ஆகிய மூவரில் யாரவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் அனிதா வெளியேறி இருந்தார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது.

This image has an empty alt attribute; its file name is 1-424-519x1024.jpg

வெளியேற்றம் பற்றி பேசிய அனிதா :

அதே போல வெளியேறுவதர்க்கு முன் அனிதா பிக் பாஸ் வீட்டின் கதவு அருகில் நின்றுகொண்டு நீண்ட நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். இந்த எலிமினேஷன் எப்படி என எனக்கு புரியல. நான் நன்றாக தான் விளையாடினேன், நான் வெளியேறத என்னாலே நம்ப முடியல என்ன காரணமாக இருக்கும் என்று புலம்பி கொண்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அனிதா, ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸுக்கு பின் அனிதா :

அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த சமூகத்தில் இருக்கும் சில போலியான நபர்கள் ஒரு பெண் தைரியமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.’ என்று கூறி இருந்தார். இதற்கு அனிதா சம்பத், இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் பெண்ணை தான் பிடிக்கும். நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். நாம் எப்போதும் பூ, மயில் நிலாவாக இருக்கலாமே தவிர புலி , சிங்கம், சூரியனாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அனிதாவின் குடும்பத்தினர் என்ன சொன்னார்கள் :

அதே போல மற்றொரு ரசிகர் ‘வீட்டுக்கு வந்ததும் உங்கள் குடம்பத்தினர் எப்படி உணர்ந்தார்கள். ஏனென்றால் உங்கள் எலிமினேஷன் நியாயமே இல்லை’ என்று கூறிஇருந்தார். அதற்கு பதில் அளித்த அனிதா ‘அவர்களும் ஷாக் தான் ஆனார்கள். ஆனால், நான் விளையாடியது அவர்களுக்கு மகிழ்ச்சி தான். என்னுடைய தைரியத்தை பார்த்து பெருமையடைந்தார்கள். ‘நான் வீட்டிற்கும் குழந்தை போல் விளையாடியதை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement