கமல் சாருக்கு புரியும், சிம்பு புதுசு இல்ல அவருக்கு புரியாது – அடுத்த சர்ச்சையில் சிக்கிய Calculator அனிதா

0
358
anitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க,

-விளம்பரம்-

அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு இருக்கிறார். அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா செய்யும் வேலைகள்:

இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர். சமீபத்தில் இவர் கொச்சையாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. அதில் அவர், நிரூப் மற்றும் அனிதா இருவரும் லிவ்விங் ஏரியாவில் வேலை செய்துகொண்டு இருந்தனர். அப்போது நிரூப், அந்த ரெண்டு பாட்டில எடுத்து உள்ளே வை என்று அனிதாவிடம் நிரூப் சொல்ல அதற்கு அனிதா சூ* வைப்பாங்க.

வீட்டில் சர்ச்சையை கிளப்பும் அனிதா:

-விளம்பரம்-

நான் ஏன் வைக்கணும், அது யார் பாட்டிலோ அவங்கல வைக்க சொல்லு போடா என்று படு கொச்சையாக பேசி இருக்கிறார். அதேபோல் இவர் பாலாஜி முருகதாஸை பற்றி குறை சொல்லி விட்டு பின் அவரைப் பற்றி பேசவே இல்லை என்று சமாளித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று விமர்சகர்கள் செய்து இருந்தார்கள். இப்படி அனிதா வீட்டில் உள்ள பல போட்டியாளர்களை குறை சொல்லி பேசி வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்புவை குறை சொல்லி பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

சிம்பு குறித்து அனிதா சொன்னது:

அது என்னவென்றால், நீ சொன்ன விஷயம் ரொம்ப டெப்த்தான விஷயம். ஆனால், அது அவருக்கு புரியவில்லை. அது மட்டுமில்லாமல் இவர் இப்போது தானே வந்திருக்கிறார். கமலஹாசன் சார் ஐந்து வருஷமா பார்த்து இருக்கிறார். அவருக்கு எப்படி பண்ணனும் எப்படி செய்யணும் தெரியும். ஆனால், சிம்பு புதுசு என்பதால் தெரியவில்லை என்று சிம்பு பற்றி அனிதா விமர்சித்துப் பேசி இருக்கிறார். இதனால் கடுப்பான சிம்பு போட்டியாளர்களிடம் முன்பு போல் ஜாலியாக இல்லாமல் தன் வேலையை செய்து விட்டு செல்கிறார். இது குறித்து கூட சிம்பு கடந்த வாரம் நிகழ்ச்சியில் சொன்னது,

சிம்பு கோபமாக பேச காரணம்:

சிம்பு என்றால் அன்பு இன்னொரு பக்கம் வம்பு என்பது எல்லோருக்கும் தெரியும். நான் ஜாலியாக இருக்கலாம் என்பதை அட்வண்டேஜ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சரியாக விளையாடினால் நாங்களும் அதை சரியாக கொண்டு போகுவோம். இல்லை அதை வேற மாதிரி என்று கொண்டு போனால் அப்புறம் நான் என்னுடைய இன்னொரு முகத்தை காட்ட வேண்டியிருக்கும். மக்கள் எனக்கு முழு உரிமையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை வெறுத்து வாங்குங்கள் என்று சொல்கிறார்கள். நான் அதெல்லாம் வேணாம் என்று தான் என்னுடைய இன்னொரு முகத்தை காட்டாமல் அன்பாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அனிதாவை விமர்சித்த நெட்டிசன்கள்:

இதை புரிந்து கொண்டு எல்லோரும் விளையாடினால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது என்னுடைய இன்னொரு முகத்தை காண்பிக்க வைக்காதீர்கள் என்று கோபமாக சிம்பு போட்டியாளர்களுக்கு எச்சரித்திருக்கிறார். இதன் மூலம் சிம்பு கூறியது அனிதாவிற்கு பொருந்தும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இப்படியே வீட்டில் உள்ள எல்லோரையும் விமர்சித்துப் பேசி இருந்தால் கூடிய விரைவில் அனிதா வெளியேறுவது உறுதி என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement