இதுக்காக 5 வருஷம் காத்திருக்கேன் – திருமண நாளில் அனிதா சம்பத் போட்ட பதிவு.

0
5652
anitha

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர்கள் பலர் தற்போது நடிகைகளாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தவர் அனிதா சம்பத். இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய இரண்டாம் வருட திருமண தினத்தில் தனது கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,சிறந்த கணவர், என் குடும்பத்திற்கு சிறந்த மருமகன் (இரண்டாவது மகன்) எனது நாத்தனார்கள் & மாமியாருக்கு சிறந்த சகோதரர் மற்றும் மகன். ஒவ்வொரு விதத்திலும் மிஸ்டர் Perfect.

- Advertisement -

கடவுள் எனக்கு வாழ்க்கைல பண்ண பெரிய நல்ல விஷயம் உன்ன சந்திக்க வச்சது தான்! மீடியா பெண்ணின் வளர்ச்சியை திருமணம் நிறுத்தும் என்று கூறினார்கள்! ஆனால் நம் திருமணத்திற்கு பிறகு தான் நான் வளர்ந்தேன்! அதற்கு உனது நம்பிக்கை, நீ கொடுத்த சுதந்திரம் மற்றும் ஊக்கம் தான் காரணம். எனக்காக நீ செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி.

என் வளர்ச்சியோட காரணமா இருந்துட்டு, ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி குடுக்க காதலை தவிர எதுவும் இல்ல. நம் காதல் போல் நாமும் வளர்வோம். இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் பப்பு. மேலும், 61-வது மாத காதல் ஆண்டுவிழா. சீக்கிரமா “ஐ லவ் யூ” சொல்லி தொலை. 5 வருஷமா காத்திருக்கேன்’ என்று மிகவும் எமோஷனல் பதிவை போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement