சினிமானா அட்ஜெட்மென்ட் தான், யோசிச்சா பெரிய லெவல்ல வரமுடியாது – அனிதா சம்பத் பகிர்ந்த ஸ்க்ரீன் ஷாட்.

0
37859
anitha
- Advertisement -

சமீப காலமாகவே சினிமாவில் உள்ள பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கடந்த சில காலமாக பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அதுவும் மீடு(Mee Too) விவகாரம் தலையெடுத்து ஆடுகிறது. நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக Me Too ஆன்லைன் மூலம் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க casting director என்ற பெயரில் பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று புது முக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் அவலமும் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் casting director என்ற பெயரில் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பெண்களை குறிவைத்து அவர்களை அட்ஜெட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறிய ஆசாமியின் லட்சணத்தை தோலுரித்து காட்டியுள்ளார் அனிதா சம்பத்.

இதையும் பாருங்க : மாமன் கர்ணனை தேடி மலை உச்சி ஏறினால் திரௌபதை – பல சர்ச்சைகளை கடந்து வெளியான கர்ணன் பட பாடல்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் அர்ச்சனா, சம்யுக்தா, ரம்யா, அனிதா போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் எந்த ஒரு யூடுயூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்கவில்லை.

இருப்பினும் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், அடிக்கடி சில விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஆசாமி, பெண் ஒருவருக்கும் பெரிய நடிகரின் படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு அட்ஜெட்மென்ட் செய்ய வேண்டும் என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே, சினிமானா அட்ஜெட்மென்ட் தான், யோசிச்சா பெரிய லெவல்ல வரமுடியாது என்றும் கூறியுள்ளார். இதனை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எச்சரிக்கை செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement