உங்க பெத்தவங்க உயிரோடு இருக்கும் போதே – தன் தந்தை பிறந்த நாளில் அனிதா சம்பத் போட்ட உருக்கமான பதிவு.

0
456
anitha
- Advertisement -

அனிதாவின் தந்தையான ஆர்,சி.சம்பத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்திரிகையாளரான இவர் ’தாய்’ வார இதழில் பணிபுரிந்து இருக்கிறார். மேலும், தமிழின் பிரபல வார இதழ்கள் அனைத்திலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் நகைச்சுவை அதிகம்நடைபோடும். அனிதா கலந்து கொண்ட பிக்பாஸ் அறிமுக மேடையில் கமலே ஆர்.சி.சம்பத் பற்றிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர், மாரடைப்பு காரணமாக காலமாகி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும்,  தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அனிதா சமபத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஒரு சில தினங்கள் தான் ஆகிறது. ஆனால், அதற்குள்ளாகவே அவரது வீட்டில் இப்படி இழப்பு நடைபெற்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளில் அனிதா பதிவு ஒன்றை போட்டுள்ளார். அப்பாவுக்கு இன்னக்கி பிறந்தநாள் போன வருடத்தின் இந்த பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். இதை விட என் மன ஓட்டத்தை சரியாக சொல்ல வேறு பதிவை எழுதிவிட முடியாது. பண்டிகை நாளில் பிறந்தநாள் வருவது வரமென நினைத்தவள். அது ஒரு பாரம் என தெரிகிறது அவர்களை இழந்தபின்பு,நல்ல நாளில் மனவேதனையோடு பண்டிகையை கொண்டாடும் போது.

நாங்கள் கட்டிய வீட்டை நீ பார்த்திருக்க வேண்டும் டேடி!! என் பொண்ணு 29 வயசுல பெரிய வீடு கட்டியிருக்கானு ஊரெல்லாம் போன் பண்ணி சொல்லி பெருமப்பட்டிருப்ப,பல பிள்ளைகள் நல்ல இடத்திற்கு வர போராடும் போதெல்லாம் இருக்கும் பெற்றோர்..அவர்கள் நினைத்ததை அடைந்த பின் திரும்பிப்பார்க்கும் போது ஏனோ இருப்பதில்லை. இப்ப அம்மா இருந்த நல்லாருக்குமே.

-விளம்பரம்-

இப்ப அப்பா இருந்தா நல்லாருக்குமேனு ஏங்க வச்சிடுராங்க. என்னைப்போன்றே குடும்பத்தில் ஒருவரை இழந்து வலிகளோடு சிரித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த அன்புத்தோழியின் virtual hug. பெற்றோர்கள் கூடவே இருப்பின்..இருக்கும்போதே நல்லா பாத்துக்கோங்க என்னும் அன்பு வேண்டுகோள். அப்பாவா..அம்மாவா..நண்பனா..எல்லாமுமா என் கண்ணீரை துடைத்து “விட்றா கன்னுக்குட்டி எது நடந்தாலும் பாத்துக்கலாம்னு நான் இன்னக்கி உயிரோட இருக்க காரணாமான…

anitha

என் பெற்றோருக்கும் மகனா இருந்து பார்த்துக்கிட்ட..இன்னும் பார்த்துக்குற…என் உலகத்திற்கு மிக்க நன்றி! உங்கள் பெற்றோர்கள் இருக்கும் போதே அவர்களை கொண்டாடுங்கள். பெற்றோர்களை பெருமைப்படுத்துங்கள் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement