வீட்டுக்குள்ள இருந்து கத்தலாம். ஆனா Sixer அடிக்கிறதோட கஷ்டம் batsmanக்கு தான் புரியும்-அனிதாவின் முதல் பதிவு.

0
2523
anitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 86 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இப்படி ஒரு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தது போல அனிதா தான் இந்த வாரம் வெளியேறி இருந்தார். உண்மையில் இந்த வாரம் ஆஜீத் அல்லது ஷிவானி தான் வெளியேற்றப்புடுவார்கள் தான் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அனிதா கடந்த வாரம் ஆரி, பாலாஜி போன்றவர்களுடன் செய்த வாக்குவாதத்தில் தான் வெளியேறினார் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை போட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது. இதுக்கு மேல என்ன வேணும்..யாருக்கும் சொம்பு தூக்காம உண்மையா இருந்துட்டு வந்துருக்கேன். safe கேம் விளையாடள, favouritism காமிக்கள, உடம்பை காமிக்கள, காசு கொடுத்து ப்ரோமோஷன் பேஜ் இல்லை. என்னோட பேஜ்ஜில் இருந்து மற்ற போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசல, எனக்கு நெருக்கமானவர்களின் தவறை சுட்டிகாட்டி இருக்கிறேன். அதை நினைத்து பெருமையடைகிறேன்.

இதையும் பாருங்க : துவங்கியது Freeze Task : எதுக்கு இங்க வந்த, லாஸ்லியா தந்தை போல வெளுத்து வாங்கும் ஷிவானியின் தாய்.

- Advertisement -

Finals வரைக்கும் இருந்தேன்னு சொல்லிக்கிற பெருமைய விட..இருந்த வரைக்கும் விளையாட்ட twist பண்ணதுல எனக்கும் பங்கு இருக்குனு சொல்லிக்கிறத ரொம்ப பெருமையா நெனக்கிறேன். எனக்கு கடைசி வரைக்கும் vote பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி..அழுகையும் கோபமும் எல்லாருக்கும் வரும்..நீங்க Biggboss வீட்டுக்குள்ள போனாதான் அது புரியும் ஒரு sensitive person அவ்ளோ stressful வீட்ட handle பன்றது எவ்ளோ கஷ்டம்னு.Six அடி six அடினு வீட்டுக்குள்ள இருந்து கத்தலாம்..ஆனா Sixer அடிக்கிறதோட கஷ்டம் batsmanக்கு தான் புரியும்.

This image has an empty alt attribute; its file name is 1-171-440x1024.jpg

“neutral audience” எல்லாருக்கும் மிக்க நன்றி..Unga comments and posts பாத்தேன்.. நான் மிகவும் சந்தோசமாகவும், என்னுடைய விளையாட்டின் மூலம் நல்ல தன்னம்பிகையையும் பெற்றேன். பார்வையளர்களை கவர உடனே மன்னிப்பு கேட்டு நடிக்க தெரியாது..போலியா சிரிக்க தெரியாது..கோபத்த evictionல இருந்து தப்பிக்க அடக்க தெரியாது..நான் நானா இருந்தேன். fan பேக் என்ற பெயரில் மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தை அசிங்கமாக பேசும் நபர்களுக்கு, உங்களுக்கு காட்டுறது வெறும் ஒரு மணி நேரம். நாங்க பாக்குறது 24 மணி நேரம். யாரும் இங்கே ஒழுங்கு இல்லை, எல்லா நேரமும் யாராலும் சரியாக இருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement