இத்தனை வருஷம் அரசியல் செய்தும் வெறும் – விடுதலை சிறுத்தை குறித்து அனிதா சம்பத் ட்வீட்.

0
2153
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் அர்ச்சனா, சம்யுக்தா, ரம்யா, அனிதா போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் எந்த ஒரு யூடுயூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதை விமர்சித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

ட்விட்டரில் அனிதா சம்பத் பெயரில் இருந்து வரும் ட்விட்டர் கணக்கை கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் இந்த கணக்கில் இருந்து தி மு க கட்சியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளதை கேலி செய்யும் விதமாக, இத்தனை வருஷம் அரசியல் செய்தும் வெறும் 6 சீட்டு தானா என்று பதிவிடபட்டிருந்தது. இந்த டீவீட்டை பார்த்த பலரும் பல கமன்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

- Advertisement -

வருகிற 2021 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முதல் கட்சியாக பா ம க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் பணிகளை மும்முரபடுத்தி வருகிறது. கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற பெரிய தலைகள் இல்லாமல் நடைபெற போகும் முதல் தேர்தல் இது. பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்து அறிவித்துள்ள நிலையில் தி மு க கட்சி, விடுதலை சிறுத்தையுடன் கூட்டணி வைத்துள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இழுபறி நீடித்த நிலையில் நேற்று (மார்ச் 4) இதற்கான முடிவு எட்டியது. 6 தொகுதிகள் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 10 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement