செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா வரை சென்ற பல நடிகைகளில் அனிதா சம்பத்தும் ஒருவர். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.
இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார்.
பெயரை டேமேஜ் செய்துகொண்ட அனிதா :
கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அதே போல வெளியேறுவதர்க்கு முன் அனிதா பிக் பாஸ் வீட்டின் கதவு அருகில் நின்றுகொண்டு நீண்ட நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். இந்த எலிமினேஷன் எப்படி என எனக்கு புரியல. நான் நன்றாக தான் விளையாடினேன், நான் வெளியேறத என்னாலே நம்ப முடியல என்ன காரணமாக இருக்கும் என்று புலம்பி கொண்டு இருந்தார்.
பிக் பாஸுக்கு பின் அனிதா சொன்னது :
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா. இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் பெண்ணை தான் பிடிக்கும். நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். நாம் எப்போதும் பூ, மயில் நிலாவாக இருக்கலாமே தவிர புலி , சிங்கம், சூரியனாக இருக்க முடியாது என்று கூறி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத்.
அனிதாவின் புதிய வீடு :
இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அது என்னவெனில் அனிதா சம்பத் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு.
கனவை நினைவாக்கி விட்டோம் :
நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம் “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.