செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தந்தையான ஆர்,சி.சம்பத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்திரிகையாளரான இவர் ’தாய்’ வார இதழில் பணிபுரிந்து இருக்கிறார். மேலும், தமிழின் பிரபல வார இதழ்கள் அனைத்திலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் நகைச்சுவை அதிகம்நடைபோடும். அனிதா கலந்து கொண்ட பிக்பாஸ் அறிமுக மேடையில் கமலே ஆர்.சி.சம்பத் பற்றிப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் இவர், மாரடைப்பு காரணமாக காலமாகி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்றும் அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. அனிதா சமபத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஒரு சில தினங்கள் தான் ஆகிறது. ஆனால், அதற்குள்ளாகவே அவரது வீட்டில் இப்படி இழப்பு நடைபெற்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத், எனது தந்தை வயது முதிர்ச்சி காரணமாக திடீரென்று காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 62. அவர் இல்லை என்பதை தற்போது என்னால் நம்ப முடியவில்லை. இறுதியாக நான் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போதுதான் சந்தித்தேன். நான் பிக்பாஸில் இருந்து வந்தவுடன் அவர் சீரடி சென்றிருந்தார். அவரது செல்போன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரிடம் போனில் கூட நான் பேசவில்லை.
இன்று காலை 8 மணி அளவில்அவர் ஷீரடியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது ஆந்திராவிற்கு அருகில் அவர் இறந்து விட்டார் என்று அதிர்ச்சியான செய்தியை கேட்டேன். அவர் நாளை சென்னை வந்து அடைந்து இருக்க வேண்டியது. அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதை என்னால் நம்ப முடியவில்லை. அப்பா, நீ வீட்டிற்கு நடந்து வரணும், உன்கிட்ட நெறைய பேசனும், உன் குரலை கேட்டு நூறுநாள் மேலாட்சி. தெரிஞ்சிருந்தா முன்னாடியே எலிமினேட் ஆகி அப்பா கூட கொஞ்சநாள் இருந்திருப்பேன். விஜய் டிவி ஷோ திரும்ப வரும் என் அப்பா இனி திரும்ப வர மாட்டாரு. இந்த வாரம் சேவாகி இருந்தா கடைசியாக கூட அப்பாவை பார்த்து இருக்க முடியாது.
வாழ்க்கை என்பது மிகவும் கணிக்க முடியாத ஒன்று. இங்கே அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. உங்களின் பெற்றோர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அவரை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ள, அனிதா சம்பத் தன்னுடைய தந்தை இறந்ததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். அதில் தன்னுடைய தந்தைக்கு அல்சர் இருந்ததாகவும் அவர் வயது முதிர்ச்சி காரணமாக தான் இறந்தார் என்றும் அவர் கடந்த இரண்டு தினங்களாக சாப்பிட முடியாமல் இருந்தார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட வில்லை என்றும் கூறியிருக்கிறார் அனிதா சம்பத்.