தனது தந்தையுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத்.

0
979
anitha
- Advertisement -

செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தந்தையான ஆர்,சி.சம்பத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்திரிகையாளரான இவர் ’தாய்’ வார இதழில் பணிபுரிந்து இருக்கிறார். மேலும், தமிழின் பிரபல வார இதழ்கள் அனைத்திலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் நகைச்சுவை அதிகம்நடைபோடும். அனிதா கலந்து கொண்ட பிக்பாஸ் அறிமுக மேடையில் கமலே ஆர்.சி.சம்பத் பற்றிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்தின் தந்தை நேற்று (டிசம்பர் 29) காலமானார். தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத், எனது தந்தை வயது முதிர்ச்சி காரணமாக திடீரென்று காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 62. அவர் இல்லை என்பதை தற்போது என்னால் நம்ப முடியவில்லை. இறுதியாக நான் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போதுதான் சந்தித்தேன். நான் பிக்பாஸில் இருந்து வந்தவுடன் அவர் சீரடி சென்றிருந்தார். அவரது செல்போன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரிடம் போனில் கூட நான் பேசவில்லை என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

தந்தைக்கு அல்சர் இருந்ததாகவும் அவர் வயது முதிர்ச்சி காரணமாக தான் இறந்தார் என்றும் அவர் கடந்த இரண்டு தினங்களாக சாப்பிட முடியாமல் இருந்தார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட வில்லை என்றும் கூறி இருந்தார் அனிதா சம்பத். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையுடன் இறுதியாக எடுத்த புகைப்படம் ஒன்றை தனத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்..பிக்பாஸ் quarantine போகும்போது எடுத்தது.

அப்பானா எனக்கு உயிரு..எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்..எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்..உன்ன வழியிலயே hospital கூட்டிட்டு போய் இருப்பேன்..நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப Sorry daddy..என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது. எங்க போன ராசா. இத என்னுடைய ரசிகர்களுக்காக தான் சொல்கிறேன். இத யூடுயூப் சேனல் வேற மாதிரி டைட்டில் போட்டு இத மூலமா காஸ் பாக்காதீங்க.

-விளம்பரம்-
Advertisement