தனது அம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்த அனிதா – பிக் பாஸ்ல சொன்ன மாதிரி நிஷா மாதிரியே தான் இருக்காங்க.

0
3743
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால் அனிதா சம்பத் தனது சமூக வலைதளத்தில் மட்டும் தன்னை பற்றிய அப்டேட்டுகளை பகிர்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சிறு வயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, என் அம்மா நிஷா மாதிரி இருக்காங்களா என்று கமன்ட் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : சன் டிவில பிச்சைக்காரன் படம் பாத்துட்டு இருக்கீங்களா? அதில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஒரு டாஸ்கில் தனது அம்மா குறித்து பேசி இருந்தார் அனிதா சம்பத். அப்போது நிஷாவை தன்னோடு அம்மாவுடன் ஒப்பிட்டு பேசிய அனிதா, நிஷா அக்காவை பார்க்கும் போது என்னுடைய அம்மாவை பார்ப்பது போல இருக்கிறது. என் அம்மா கொஞ்சம் கருப்பாக இருப்பார்கள். அதனால் என்னுடைய பள்ளி, கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூட வர யோசிப்பார்கள். அதேபோல நான் இந்த டிரஸ் போடமாட்டேன் நகை போட மாட்டேன், நகை போட்டால் நான் மேலும் கருப்பாகத் தெரிவேன்.

This image has an empty alt attribute; its file name is Anith.jpg

நான் கல்லூரிக்கு வந்தால் என்னை கேலி செய்வார்கள் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.ஆனால், நிஷா அக்கா அனைத்தையுமே பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார். எனவே என்னுடைய அம்மா, அக்காவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கருப்பு நிறத்தை எண்ணி எங்கேயும் தன்னை தாழ்வாக நினைக்காமல் அக்கா இருக்கிறார். அதனால் நிஷா அக்காவிடமிருந்து என்னுடைய அம்மா கற்றுக் கொள்ள நினைக்கிறேன் என்று உருக்கமுடன் கூறியிருந்தார் அனிதா சம்பத். அனிதா சம்பத் சொன்ன அவரது அம்மா இவர் தான்.

-விளம்பரம்-
Advertisement