இது சோகமான கதை நம்புங்கனு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல ? – அனிதாவை மீண்டும் கலாய்த்த பிரபலம்.

0
7014

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் அனைத்தும் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம்தான் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் ஒரு சில படங்களில் நடிக்கவும் நடித்திருக்கிறார் இவர் இன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர் கூட்டம் இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே இவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒரு சில செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனிதா சம்பத் கடந்து வந்த பாதை என்ற ராசியின் போது சொன்ன கதையை நடன இயக்குனரான சதீஷ் கலாய்த்திருக்கிறார். அனிதா தயவு செஞ்சு கொஞ்சம் மெதுவா பேசுங்க. மறுபடியும் பார்த்தால்தான் புரியும் போல. எனக்கு சோகம் வரவே இல்லை ஏன்னு புரியல.ஆமாமா அனிதா கதை ஓவர் தான். அவங்க சொன்ன கதை சோகமாகவும் இல்லை உணர்ச்சி பூர்வமாகவும் இல்லை. இப்படியே விடாமல் பேசினா எல்லாரும் ஓடிட்டுவாங்க ஓடிக்கிட்டு இருங்க. இந்த கொரோனா நிறைய பேருக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால கொஞ்சம் அமைதியா இருங்க என்றெல்லாம் அனிதா சம்பத்தை கலாய்த்துஇருந்தார்

- Advertisement -

அனிதா சம்பத்தின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ஏண்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா, கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசி தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவித்த பசியையும் வலியையும் கூட கிண்டல் பண்ண தோணும். பின்குறிப்பு : கொரியோகிராபர்னா டான்ஸ் ஆடலாம் டா ஆணவத்தில் ஆடாதீங்க’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்க்கும் போது இது சதீஷுக்கு கொடுத்த பதிலடி போல தான் தோன்றியது.

இப்படி நிலையில் சதிஷ் மீண்டும் ஒரு டீவீட்டை ஒன்றை போட்டுள்ளார். அதில், சோகமான ஸ்டோரி மத்தவங்க கிட்ட சொன்னா சோகமா தான் இருக்கும்னு நினைச்சா என்னன்னு சொல்றது ? இது சோகமான கதை நம்புங்கனு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல ? உங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியல. அவங்க உள்ள அழுவதும் நீண்ட வெளியே அழுவதும், எப்பா சாமி. பிபி டேப்லெட் வாங்கி வச்சிக்கோங்க என்று மீண்டும் அனிதா சம்பத்தை கலாய்த்து உள்ளார் சதிஷ்.

-விளம்பரம்-
Advertisement