நான் போனா என் நண்பர்கள பாக்கலாம்தா, ஆனா – ரி-என்ட்ரி குறித்து அனிதா சம்பத் பதில்.

0
2722
anitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் உள்ளே சென்று இருந்தனர். அதே போல இன்றைய நிகழ்ச்சியில் சனம், சம்யுக்தா, வேல்முருகன், சுச்சத்ிரா, ஆஜீத் ஆகியோர் உள்ளே சென்று உள்ளனர். இன்னும் அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் தான் என்ட்ரி கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி எப்போது வருவார் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள போட்டியாளர்கள்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டிவி முன்னாள் அமர்ந்துகொண்டு உங்கள் அனைவரையும் உற்காசகாப்படுத்துவேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் அளவில் படு கிளாமர் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா.

- Advertisement -

சுரேஷ் சக்ரவர்த்தியின இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போது நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மாடீர்களா என்று கமன்ட் செய்து வந்தனர். அதற்கு பதில் அளித்துள்ள சுரேஷ் சக்ரவத்தி எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத இடத்திற்கு நான் எப்படி வரமுடியும். ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளரோ என்னவோ என்றும் இதற்கு முன்னாள் இப்படி அவமதிக்கப்பட்டது இல்லை என்றும் வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். சரி, சுரேஷ் சக்கரவர்த்தி தான் இப்படி சொல்லிவிட்டார் அனிதா வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அனிதா சம்பத் பிக் பாஸில் இருந்து வெளியேறிய சில நாட்களில் அவரது தந்தை காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது ரசிகர்களின் மெசேஜ்களுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்க எப்ப உள்ள வருவீங்க, உங்களை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று பதிவிட அதற்கு அனிதா சம்பத், உள்ளே சென்றால் என் நண்பர்களை பார்க்கலாம். அது நான் மீண்டு வர உதவும். ஆனால், நான் உள்ளே சென்றால் அதையும் கேலி செய்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement