சுமங்கலி பஞ்சாயத்தில் சிக்கிய அனிதா சம்பத், தாலி,மெட்டி குறித்து என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
116928
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் நேற்றய நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சுரேஷ் சக்ரவத்தி எதார்த்தமாக சுமங்கலி யாராவது வந்து விளக்கேட்ருங்கள் என்று கூறி இருந்தார். ஆனால், சிறிது நேரம் கழித்து பேசிய அனிதா, கணவர் இறந்துவிட்டால் வித்தியாசமாக பார்க்கும் பழக்கம் இன்னும் கிராமங்களில் ஒரு சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக இன்றைக்கு நான் பார்த்தேன், சுரேஷ் சார் சுமங்கலி யாராவது இருக்கிறீர்களா என்று என்னை அழைத்தது சந்தோஷம். ஆனால், ஒருவேளை நான் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கணவரை இழந்த பெண்கள் இருந்திருந்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று நான் யோசித்து பார்க்கிறேன்.

- Advertisement -

இது போன்ற விஷயங்களை கிராமங்களில் இன்னமும் பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதும் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் சுமங்கலி யாராவது இருக்கிறீர்கள் வந்து ஆரம்பித்து வையுங்கள் என்று தான் சொல்வார்கள். அது சென்னையில் மிகவும் கம்மியாக இருக்கிறது என்றுகூறிய அனிதா, தன்னுடைய திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றியும் ஒரு இருந்தார். பின்னர் இறுதியில் சுமங்கலி, அமங்கலி என்றெல்லாம் கிடையாது, யார் ஆரம்பித்தாலும் ஒரு நிகழ்ச்சி நன்றாக தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.

ஆனால், அனிதா சொன்ன இந்த விஷயம் சுரேஷ் உட்பட பலரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.ஒரு நல்ல நாளில் இப்படி எல்லாம் பேச வேண்டுமா என்று பலரும் வருத்தப்பட்டனர். அதே போல சுரேஷ் கூட, அந்த பெண் வேண்டுமென்றெ என் பெயரை கெடுக்க இப்படி பேசுகிறது. இது ஒரு மிகப்பெரிய கெட்ட பெயரை எனக்கு ஏற்படுத்திவிடும் என்று கூறி இருந்தார். மேலும், நிஷா, ரியோ, அர்ச்சனா என்று பலரும் அனிதா சொன்னது தவறு என்று அவருக்கு அறிவுறுத்தினர். பின்னர் தான் செய்தது தவறு என்று சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சுரேஷ் அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க அனிதா என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிஙகில் வந்துள்ளது. அதில் அனிதா சம்பத்துக்கு எதிரான பல ட்வீட்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக தாலி குறித்து போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அனிதா சம்பத் கடந்த ஆண்டு பிரபாகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் செப்டம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தாலி எங்கே என்று கேட்டிருந்தார்.

தாலி மெட்டி எல்லாம் நம்ம கலாச்சாரம்தான். ஆனால் ஊரு என்ன சொல்லுமோனு செய்ய கட்டாயப்படுத்துற கலாச்சாரத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை போட்டுக்க முடியாத சூழலில் போட்டுக்க மாட்டேன் அது என் முடிவு 100% அதை முடிவு பண்ற சுதந்திரத்தை என் கணவர் எனக்கு கொடுத்து இருக்காரு என்று பதிலளித்திருக்கிறார்.

Advertisement